News
Loading...

ஜெயிலுக்கு போவாரா சசிகலா? ஜெ.மருமகள் தீபாவிடம் கட்சி? பீதியில் கார்டன்!

ஜெயிலுக்கு போவாரா சசிகலா? ஜெ.மருமகள் தீபாவிடம் கட்சி? பீதியில் கார்டன்!

.தி.மு.க., பொதுச் செயலராக நியமிக்கப் பட்டுள்ள சசிகலாவிற்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வழக்கின் தீர்ப்பு, தமிழக அரசியலில், அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், முதல்வர் பதவியேற்பை தள்ளிப் போட்டு பீதியில் சசிகலா உள்ளதாக அவருக்கு எதிராக தொடர்ந்து செய்தி வெளியிட்டு வரும் தினமலர் தெரிவித்துள்ளது.

அதேபோல, ஜெயலலிதாவின் வாரிசாக உரு வெடுக்க தயாராக இருக்கும், அண்ணன் மகள் தீபாவும், சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்புக்கு பின், களம், ‘கிளியர்’ ஆகும் என்பதால், பொறுத்திருக்கிறார் என தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

அது போல அதிமுக சீனியா்கள் உள்ளிட்ட முக்கியஸ்தா்களும் தீபாவிடம் சென்று சேர நாள்பார்த்து காத்து இருக்கின்றராம்.

அமைச்சா்கள் அனைவரும் தமிழக முதல்வா் பன்னீா் செல்வம் என்று கூறுவதே கிடையாது. அவா் எதிரே கேலியும். கிண்டலும் செய்து வருகின்றனராம். தொடா்ந்து மன்னார்குடி குடும்பத்தாரால் அசிங்கப்படுத்தப்பட்டும் வருகிறாராம்.

தீபாவிடம் முதலில் பன்னீா் செல்வத்தின் ஆதரவாளா்கள்தான் வருவார்கள் என்று அதிமுக வட்டாரங்களே கூறுகின்றதாம்.

வருமானத்திற்கு அதிகமாக, 66 கோடி ரூபாய் அளவுக்கு, சொத்துக்கள் சேர்த்ததாக, ஜெ., மீது கூட்டு சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தில், 1996ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

கூட்டு சதி மற்றும் சொத்து சேர்ப்புக்கு, உடந்தையாக இருந்ததாக, சசிகலா, இளவரசி, சுதாகரன்ஆகியோர் மீதும், வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, 2014 செப்டம்பரில், தீர்ப்பு வழங்கினார்.

ஜெ.,வுக்கு நான்கு ஆண்டுகள் சிறை, 100 கோடி ரூபாய் அபராதம்; சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, நான்கு ஆண்டுகள் சிறை, தலா, 10 கோடி ரூபாய்அபராதம் விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து, நான்கு பேரும், கர்நாடகா உயர் நீதிமன்றத்தில், மேல் முறையீடு செய்தனர்.

மேல் முறையீட்டு மனுவை விசாரித்த, நீதிபதி குமாரசாமி, நான்கு பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து, கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இம்மனுவை, நீதிபதிகள் பி.சி.கோஷ், அமித்வ ராய் ஆகியோர் விசாரித்தனர்.

அனைத்து தரப்பு விசாரணையும் முடிந்து, தேதி குறிப்பிடாமல், 2016 ஜூன் மாதம், தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், டிச., 5ல், ஜெயலலிதா திடீர் மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க.,வின் புதிய பொதுச்செயலராக, அவரது தோழி சசிகலா பொறுப்பேற்றுள்ளார்;

முதல்வராகவும் முடிவு செய்துள்ளார். அதற்கு, சொத்து குவிப்பு வழக்குஇடையூறாக உள்ளது.

இதில், எந்த நேரத்திலும் தீர்ப்பு வெளியாகலாம் என்ற நிலை காணப்படுகிறது.

எனவே, முதல்வர் பதவியேற்பை தள்ளிப் போட்டு, தற்போது தீர்ப்புக்காக, சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் காத்து இருக்கின்றனர்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு, அ.தி.மு.க., வினரிடம் நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருவதாகவும் தினமலர் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறது.

சென்னை, தி.நகரில் உள்ள அவரது வீட்டுக்கு, ஆதரவாளர்கள் தினமும் வந்த வண்ணம் உள்ளனர்.

அவர்களின் அழைப்பை ஏற்று, அரசியலுக்கு வர முடிவு செய்துள்ள தீபாவும், சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்புக்காக காத்திருக்கிறார்.

அந்த முடிவு, சசிகலாவுக்கு எதிராக வந்தால், அவரை ஆதரிக்கும் முன்னணி தலைவர்கள் பலர் அணி மாறக்கூடும் என்பதால்,

அரசியல் பிரவேசத்தை தள்ளிப்போட்டு, தீர்ப்புக்காக காத்திருப்பதாக தெரிவதாக நீண்டு கொண்டே செல்கிறது அந்தச் செய்தி.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.