News
Loading...

சசிகலாவுக்கு சிறை: தமிழகத்தை கடவுள் காப்பாற்றிவிட்டார்: கமல் உள்பட நடிகர், நடிகைகள் கருத்து

சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை: தமிழகத்தை கடவுள் காப்பாற்றிவிட்டார்: கமல் உள்பட நடிகர், நடிகைகள் கருத்து

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை  வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதை நடிகர்,  நடிகைகள் வரவேற்றுள்ளனர். 

சித்தார்த்: நீதிக்கான கியாரன்டி தரப்பட்டுள்ளது. வரவேற்கிறேன். 

பிரகாஷ்ராஜ்: இது முடிவல்ல... தூய்மைப்படுத்துவது ஆரம்பம்தான். இன்னும் பல மைல்கள் செல்ல வேண்டியுள்ளது. 

பார்த்திபன்: சட்டம் என் கையில் என பணம் மார்தட்டிக்கொள்ளவிடாமல், சட்டம்  சத்தியத்தின் பக்கமே என போராடிய நீதியின் ஆச்சாரியார்களுக்கு வணக்கமும்  நன்றியும்.

அரவிந்த்சாமி: கீழ்கோர்ட் தீர்ப்பு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. தற்போதைய முதல்வர் தனது அலுவலகத்துக்கு இன்று  சென்று  பணியை செய்வதை காண வேண்டும். மக்களுக்காக எம்எல்ஏக்களும் பணிக்கு   திரும்பவேண்டும். 

இசையமைப்பாளர் கங்கை அமரன்: என்னைப் பொறுத்தவரையில் ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவன். ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில்  நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே’ என்று ஒரு பாடல் உண்டு. சிறுக சிறுக நான் உழைத்து சம்பாதித்து வாங்கிய சொத்தை பறித்தார். இப்போது சரியான நேரத்தில் இறைவன் தண்டனை வழங்கியிருக்கிறான். 

இனி சசிகலாவின் முதல்வர் கனவு ஒருபோதும் நிறைவேறாது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே சசிகலாவின் ஆட்டம் கடுமையாக இருந்தது, அவரே முதல்வராகி இருந்தால் தமிழகம் என்ன நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும்? கடவுள் காப்பாற்றிவிட்டான் என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

குஷ்பு: தீர்ப்பு வந்துவிட்டது. யாஹு... கொண்டாட்ட நேரம். மாநிலம் பாதுகாக்கப்பட்டுள்ளது. பயமுறுத்திக்கொண்டிருந்த இருண்ட காலம் முடிவுக்கு வந்திருக்கிறது. காதலர் தினத்தையொட்டி தமிழ்நாட்டு மக்களுக்கு சுப்ரீம் கோர்ட் சிறந்த பரிசு வழங்கி இருக்கிறது. இனி மக்கள் பயமின்றி நிம்மதியாக சுவாசிக்க முடியும். 

கவுதமி: ஊழல்  செய்ததற்காக சசிகலா குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். நீதி ஜெயித்திருக்கிறது. அதேபோல்  ஜெயலலிதாவின் மரணத்துக்கும் அவர் பதில் சொல்லி ஆக வேண்டும். இரு வழக்கும்  ஒரே தண்டனைக்குரியது அல்ல. 

ஶ்ரீ பிரியா: நாடகமே உலகம். நாமெல்லாம்  நடிகர்கள். இயக்குபவன் இறைவன். முக்கியமாக  தொகுப்பாளன். வேண்டாத காட்சிகளை  தக்க சமயத்தில் வெட்டி எறிவான். நன்றி இறைவா.

கமல்ஹாசன்:  பழைய பாட்டுத்தான் இருந்தாலும்... ‘தப்பான ஆளு எதிலும் வெல்லும் ஏடா  கூடம்.. எப்போதும் இல்லை... காலம் மாறும் நியாயம் வெல்லும்

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.