News
Loading...

கோவையில் மீண்டும் தலைதூக்குகிறதா இஸ்லாமிய பயங்கரவாதம்?

கோவையில் மீண்டும் தலைதூக்குகிறதா இஸ்லாமிய பயங்கரவாதம்?

கோவை: கோவையில், 20 ஆண்டுகளுக்குப் பின், மத ரீதியான பயங்கரவாத செயல்கள் மீண்டும் தலைதுாக்கியிருப்பதாக எச்சரித் துள்ள உளவுத்துறை, இந்நிலை நீடித்தால், தமிழக அரசு மிக மோசமான சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும் என, உஷார்படுத்தியுள்ளது.

தமிழக அளவில், மத ரீதியாக பதற்றம் நிறைந்ததாக கருதப்படும் கோவையில், மதவாத தாக்குதல்கள் தலைதுாக்க ஆரம்பித் துள்ளன. 2016 செப்., 22ல், கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார், 37 மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்டார்.

சந்தேக நபர்கள் இருவரின் விபரங்களை வெளியிட்டுள்ள, சி.பி.சி.ஐ.டி., போலீசார், ஆறு மாதங் களாக, குற்றவாளிகளை நெருங்க முடியாமல் திணறுகின்றனர்.இந்நிலையில், 'பேஸ்புக்'கில் இறைமறுப்பு கருத்துக்களை வெளியிட்ட பாரூக் என்பவர், மத அடிப்படை வாதிகளால் கோவை, உக்கடம் பகுதியில் வெட்டிக் கொல்லப்பட்டார்.

கோவையில் மீண்டும் தலைதூக்குகிறதா இஸ்லாமிய பயங்கரவாதம்?

இக்கொலை தொடர்பாக, இருவர் சரணடைந் துள்ள நிலையில், மேலும் சிலரை போலீசார் தேடுகின்றனர். பாரூக் கொலை வழக்கில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஒருவர், 

கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரின், நெருங்கிய உறவினர். மேலும், 'கர்நாடக மாநிலம், பெங்களூரு, பா.ஜ., அலுவலக குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, விடுவிக்கப் பட்டவர். 

கோவையில் தொடர் குண்டுவெடிப்பை நிகழ்த்திய, 'அல் உம்மா' பயங்கரவாத அமைப்பின், 'மாஜி' உறுப்பினர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்ப வர்' என, உளவுத்துறை குறிப்புகள் தெரிவிக்கின்றன.

உளவுத்துறை எச்சரிக்கை

கோவை நகரில், 1997, நவ., 30ல், நடந்த மத கலவரம், 1998, பிப்., 14ல், நடந்த தொடர் குண்டு வெடிப்புக்குப் பின், அல் உம்மா, பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு, தமிழக அரசால் தடை செய்யப்பட்டது.குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை முடிந்து, விடுதலை யானவர்களில் சிலர், ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, பணம் பறித்தல் உள்ளிட்ட குற்றங்களில், ஈடுபடுவதாக போலீஸ் உயரதிகாரிகளுக்கு, உளவுத்துறை ஏற்கனவே பலமுறை குறிப்பு அனுப்பியுள்ளது.

செல்வபுரத்தில் பான் மசாலா, குட்கா மொத்த வியாபாரிகளை மிரட்டி பணம் பறித்த, அல் உம்மா முன்னாள் உறுப்பினர்களுடன், போலீஸ் துணை கமிஷனர் ஒருவருக்கு தொடர்பு இருந்ததை யும் கண்டறிந்து, உளவுத்துறை உஷார்படுத்தியது. ஆனால், அதன் பின்னும் கோவைபோலீஸ் உயரதி காரிகள், சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு நடவடிக்கை களில், அலட்சியமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மத்திய அரசால், பயங்கரவாத இயக்கமாக அறிவிக் கப்பட்டு, தடை செய்யப்பட்ட, 'சிமி' அமைப்பில் இடம்பெற்றிருந்த நிர்வாகிகள், புதிய பெயரில் நடத்தும் அமைப்புக்கு, கோவை இந்து முன்னணி நிர்வாகி, சசிகுமார் கொலையில் தொடர்பு இருப்பதும் ஓரளவு உறுதியாகி உள்ளது. கோவை நகரில், மெல்ல மெல்ல தலைதுாக்கி வரும், பயங்கரவாத அமைப்பினரின் நட வடிக்கைகளை ஆரம்பகட்ட நிலையிலேயே போலீசார் முறியடிக்காவிடில், பின்னாளில் பெரிய அளவிலான சட்டம் - ஒழுங்கு பிரச்னை களை மாநில அரசு எதிர்கொள்ள நேரிடும் என, உளவுத்துறை எச்சரித்துள்ளது.

முடங்கும் அதிகாரிகள்!

கோவை மாநகர போலீஸ் கமிஷனரின் கீழ், ஆயுதப்படை தவிர, மூன்று துணை கமிஷனர் கள் பணியாற்றுகின்றனர். ஆனால், எந்த அதிகாரியும் காலை மற்றும் மாலை நேரங்க ளில், மாநகரில் ரோந்து செல்வது கிடையாது. புறநகரில், எஸ்.பி.,யும் அலுவலகத்தில் இருந்தபடியே பணிகளை கவனிப்பதால், களத் தில் நடக்கும் விபரங்கள், முழுமையாக அவர் களை எட்டுவதில்லை. 

உயரதிகாரிகள் முறை யாக ரோந்து சென்றால் மட்டுமே, சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட முடியும் என்பதே, கோவையில் அமைதியை விரும்பு வோரின் கோரிக்கையாக உள்ளது. 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.