உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ‘டாஸ்மாக்’ கடைகள் மூடப்பட்டதால், ‘குடி’மகன்கள் திணறி வருகின்றனர். இவர்களின், ‘தாகம்’ தீர்க்க, டாஸ்மாக் கடைகள் இருக்கும் இடத்தை காட்டும் புதிய, ‘ஆப்’ உருவாக்கப்பட்டுள்ளது. ‘நாடு முழுவதும், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளுக்கு அருகிலுள்ள அனைத்து மதுக் கடைகளையும் மூட வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் எதிரொலியாக, தமிழகம் முழுவதும், 3,321 டாஸ்மாக் கடைகள் இழுத்து மூடப்பட்டன.
தாங்கள் வழக்கமாக மது அருந்தும், ‘டாஸ்மாக்’ கடைகள் மூடப்பட்டதால், மாற்று கடைகளை தேடி, ‘குடி’மகன்கள் அலைந்து வருகின்றனர். பல கி.மீ., அலைந்து, ‘குடி’ மகன்கள் மது அருந்தி வருவதை காண முடிகிறது. ‘குடி’மகன்களின், ‘தாகம்’ தீர்க்கும் வகையில், ‘டாஸ்மாக் லொகேட்டர்’ என்ற, ‘ஆப்’ உருவாக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த, ‘ஆப்’ மூலம், தாங்கள் இருக்கும் இடத்தின் அருகே உள்ள, ‘டாஸ்மாக்’ கடையின் விபரங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.
இருப்பிடத்தின் அருகே உள்ள, ‘டாஸ்மாக்’ கடை, அந்த கடைக்கு செல்லும் வழி, பயண தூரம், பயண நேரம், போக்குவரத்து நெரிசல் என, பல்வேறு தகவல்களும் தரப்பட்டுள்ளன. இந்த, ‘ஆப்’ பயன்படுத்தி, பல கி.மீ., அலையாமல், கூட்ட நெரிசலில் சிக்காமல், மது வாங்க வசதியாக இருப்பதாக, ‘குடி’மகன்கள் குஷியாக கூறுகின்றனர்.
APP link : https://play.google.com/store/apps/details?id=com.apkinstalled.tasmac&hl=en
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.