டெல்லியில் 12-ஆம் வகுப்புக்கான உடற்கல்வி பாடப் புத்தகத்தில் பெண்களின் உடல் வடிவமைப்பு குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம்பெற்ற விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹரியானாவில் உள்ள DAV கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியரான வி.கே.சர்மா என்பவர் எழுதியுள்ள உடற்கல்வி புத்தகத்தில், பெண்களின் உடல் வடிவமைப்பு இன்ச் அளவீட்டில் 36 – 24 – 36 என்ற அளவில் இருந்தால் சிறப்பானதாக கருதப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட்டிருந்த இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதை தொடர்ந்து டெல்லியில் உள்ள ப்ரீத் விஹார் காவல்நிலையத்தில் சி.பி.எஸ்.இ, சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன்படி புத்தகத்தை அச்சிட்டு வெளியிட்ட நியூ சரஸ்வதி ஹவுஸ் என்ற பதிப்பகம் மற்றும் பேராசிரியர் சர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.