எகிப்து நாட்டில் தேவாலயம் ஒன்றில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 36 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள டான்டா ((Tanta)) நகரில் உள்ள பழமையான தேவாலயத்தில், குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு ஏராளமானோர் திரண்டிருந்தனர். குருத்தோலை ஊர்வலம் தொடங்க இருந்த நிலையில், அங்கு பலத்த சத்தத்துடன் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில், 25 பேர் சம்பவ இடத்திலும், 11 பேர் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்பில் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.