News
Loading...

12 ராசிகளுக்கான ஹேவிளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்!(துலாம் ராசி முதல் மீன ராசி முடிய)

12 ராசிகளுக்கான ஹேவிளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்!

12 ராசிகளுக்கான ஹேவிளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள். வசந்த காலத்தின் முன்னுரையாக இன்று தமிழ்ப் புத்தாண்டு பிறந்திருக்கிறது. ஒவ்வொரு வருடம் பிறக்கும்போதும், இந்த வருடம் நமக்கு என்ன மாதிரியான பலன்களைத் தரும், நம்முடைய எதிர்பார்ப்புகள் இந்த வருடமாவது நிறைவேறுமா என்பதுபோன்ற கேள்விகள் மனதில் தோன்றுவது இயல்புதான். இந்த வருடம் ஒவ்வொரு ராசி அன்பருக்கும் எப்படி இருக்கும் என்பது பற்றி ''ஜோதிட முனைவர்' கே.பி.வித்யாதரன்' அவர்களிடம் கேட்டோம். அவர் சுருக்கமாகக் கூறிய பலன்கள் இங்கே உங்களுக்காக...

12 ராசிகளுக்கான ஹேவிளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்!

துலாம்:
வித்யாதரன் ராசிக்கு 11-ல் ராகு இருக்கும்போது இந்த வருடம் பிறப்பதால், செல்வம், செல்வாக்கு கூடும். ஷேர் மூலம் பணம் வரும். பொது நிகழ்ச்சிகளில் கௌரவிக்கப்படுவீர்கள். அறிவுப்பூர்வமாகவும் அனுபவப்பூர்வமாகவும் பேசி மற்றவர்களைக் கவர்வீர்கள். ஆனால், வருடம் பிறக்கும்போது ராசியில் சந்திரன் இருப்பதால், வேலைச்சுமை அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி வேலைகளை ஒப்படைக்கவேண்டாம்.

குடும்பத்தில் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகளும் துரத்தும். அவ்வப்போது உடல்நலனும் பாதிக்கப்படக்கூடும்.  முன்கோபத்தால் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளைக்  கொட்டிவிடவேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். 

வியாபாரம்: எதிர்பார்த்ததை விடவும் லாபம் அதிகரிக்கும். வேலையாட்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவார்கள்.  புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள்.  வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருப்பவர்கள் உதவியாக இருப்பார்கள். 

உத்தியோகம்: இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். ஆனாலும், அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஒரு பக்கம் அதிகாரிகளின் ஆதரவு இருந்தாலும், மறு பக்கம் பிரச்னைகளும் ஏற்படத்தான் செய்யும்.

மாணவர்கள்: படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்களுடன் கல்விச் சுற்றுலா சென்று வருவீர்கள். பழைய நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள்.  

கலைத்துறையினர்: வருமானம் உயரும். உங்களுடைய படைப்புகள் பரிசு, பாராட்டுகள் பெறும். 
இந்தப் புத்தாண்டு விரக்தியின் விளிம்பில் நின்ற உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதாக அமையும்.  

பரிகாரம்: காரைக்குடிக்கு அருகில் உள்ள இலுப்பைக்குடி என்னும் ஊரில் அருள்பாலிக்கும் சவுந்தர்நாயகி உடனுறை தான்தோன்றீஸ்வரரையும் சொர்ணஆகர்ஷண பைரவரையும் வணங்கிட வெற்றி உண்டாகும்.

12 ராசிகளுக்கான ஹேவிளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்!

விருச்சிகம்:
ராசிக்கு 5-ல் சுக்கிரன் இருக்கும்போது வருடம் பிறப்பதால், சவாலான காரியங்களையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். பிள்ளைகளுடன் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் மேம்படும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்தில் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். வருடம் பிறக்கும்போது சந்திரன் 12-ல் இருப்பதால், திடீர் பயணங்கள் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். நீண்டகாலமாகச் செல்ல நினைத்த கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.  திடீர் யோகம், அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கடனாகக் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும்.

வியாபாரம்: குறைந்த லாபம் வைத்து விற்பதால், அதிக வாடிக்கையாளர்களைப் பெறுவீர்கள். ஆவணி, புரட்டாசி மாதங்களில் விற்பனை அதிகரிக்கும். அனுபவம் மிக்க வேலையாட்கள் பணியில் இருந்து விலகுவார்கள். பங்குதாரர்களிடம் சுமுகமாக நடந்துகொள்ளவும். தை, மாசி மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும். பங்குனி மாதத்தில் வெளிநாட்டுத் தொடர்புடைய நபர் பங்குதாரராக இணைவார். உணவு, ஷேர், கல்வி வகைகளால் ஆதாயம் உண்டு.

உத்தியோகம்: உங்கள் நிலை உயரும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். ஆவணி மாதம் புது வாய்ப்புகள் வரும். உங்கள் மீது வீண்பழி சுமத்திய அதிகாரி மாற்றப்படுவார். மேலதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். சில சிறப்பு பொறுப்புகளையும் ஒப்படைப்பார்கள். பங்குனி மாதத்தில் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும்.

மாணவர்கள்: தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். ஆசிரியர்கள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். பெற்றோர் உங்கள் தேவைகளை நிறைவேற்றித் தருவார்கள். கவிதை, கட்டுரைப் போட்டிகளில் பரிசும் பாராட்டும் கிடைக்கும்.

கலைத்துறையினர்: பெரிய நிறுவனங்களின் அழைப்பு வரும். உங்கள் படைப்புகளுக்கு பரிசுகளும் பாராட்டுகளும் கிடைக்கும்.
இந்தப் புத்தாண்டு உங்களை தொலைநோக்குச் சிந்தனையுடன் செயல்பட வைப்பதுடன், மேலும் சாதிக்க வைப்பதாக அமையும்.

பரிகாரம்: கரூர் மாவட்டம், வெண்ணெய்மலை எனும் ஊரில் எழுந்தருளியிருக்கும் பாலசுப்ரமணியரை சஷ்டி திதி அல்லது பூசம் நட்சத்திர நாளில் வணங்கிட குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

12 ராசிகளுக்கான ஹேவிளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்!

தனுசு:
உங்கள் ராசிக்கு 11-ல் சந்திரன் இருக்கும்போது சந்திரன் பிறப்பதால், கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை வலுப்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். புது வேலை கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பழைய சிக்கல்களுக்கு புதிய அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த வெளிநாட்டுப் பயணம் சாதகமாக அமையும். சகோதரர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். சகோதரியின் திருமணம் நிச்சயமாகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். விலை உயர்ந்த மின்சார, மின்னணு சாதனங்களை வாங்குவீர்கள். மகளுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் உயர்கல்விக்கான இடம் கிடைக்கும். மகனின் பிடிவாதப் போக்கு மாறும். சேமிக்க முடியாதபடி செலவுகள் அதிகரிக்கும். 

வியாபாரம்: சித்திரை, வைகாசி, ஆவணி மாதங்களில் பற்று வரவு அதிகரிக்கும். புதிதாக அறிமுகம் ஆகும் நபர்களுக்குக் கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடி வரும். பெரிய வாய்ப்புகளும் தேடி வரும். சந்தையில் உங்கள் நிறுவனத்தின் மதிப்பு கூடும்.  துரித உணவு, கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், ஆடை வடிவமைப்பு இனங்களால் ஆதாயம் அடைவீர்கள்.

உத்தியோகம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். வேலையின் காரணமாக வெளிநாடு செல்லவேண்டிய வாய்ப்பும் உண்டாகும். வைகாசி, ஆனி மாதங்களில் சம்பள உயர்வு கிடைக்கும். மார்கழி, பங்குனி மாதங்களில் புதுப் பொறுப்புகள் வரும்.

மாணவர்கள்: விளையாட்டுத்தனத்தை மாற்றிக்கொண்டு, படிப்பில் தீவிரமாக ஈடுபடவும். ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பெற்றோர்களின் ஒத்துழைப்பும் அதிகரிக்கும்.

கலைத்துறையினர்: விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சக கலைஞர்கள் உங்களை மதிப்பார்கள். அரசாங்கத்தால் கௌரவிக்கப்படுவீர்கள்.
இந்தப் புத்தாண்டு உங்களை தலைநிமிர வைப்பதுடன், புகழையும் பணத்தையும் தருவதாக அமையும். 

பரிகாரம்: திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஆறுமுகமங்கலம் என்னும் ஊரில் வீற்றிருக்கும் ஆயிரத்தெண் விநாயகரை சதுர்த்தி திதி நாளில் வணங்கிட நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும்.  

12 ராசிகளுக்கான ஹேவிளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்!

மகரம்:

உங்கள் ராசிக்கு யோகாதிபதியான சுக்கிரன் உச்சம் அடைந்திருக்கும் வேளையில் இந்த ஆண்டு பிறப்பதால், பணப்புழக்கம் உங்களிடம்  நல்லமுறையில் அதிகரிக்கும்.  விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். வாகனத்தைச் சீர் செய்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த உரசல்கள் விலகும். வீடு, மனை வாங்குவது, விற்பது போன்ற முயற்சிகள் பலிதமாகும்.

உங்களின் நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் வெளிப்படக்கூடிய நேரமிது. இத்தனை நாட்களாக நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் நேரமிது. பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதற்கிணங்க உழைப்புக்கேற்ற பலன் வட்டியும் முதலுமாக வந்து சேரும்.உயர்வான சம்பளத்தில்  புதிய இடத்தில் வேலை அமையும். அயல்நாடுகளுக்கு ஒரு சிலர் சென்று வருவார்கள். மனதுக்கு மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் நடடைபெறும்.

 வியாபாரம்: தொட்டது துலங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.  வேலையாட்களின் ஒத்துழைப்பும் அதிகரிக்கும்.  வியாபாரிகளின் மத்தியில் செல்வாக்கு கூடும். 

உத்தியோகம்: உங்கள் நிலை உயரும். அலுவலக ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்துக்கொள்வார். வைகாசி, ஆனி மாதங்களில் சம்பள உயர்வு, பதவி உயர்வு உண்டு. 

மாணவர்கள்:  நல்ல முறையில் படித்து நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். ஆசிரியர்கள், பெற்றோர்கள் மனம் திறந்து பாராட்டுவார்கள்.. கதை, கவிதை, கட்டுரைப் போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். 

கலைத்துறையினர்: புது வாய்ப்பு கிடைத்து அதிகம் சம்பாதிப்பீர்கள். வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். விருது கிடைக்கும்.  

இந்தப் புத்தாண்டில்  எடுத்த காரியங்களை நீங்கள் நல்லவிதமாக முடிப்பீர்கள். நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். உங்களுடைய வசதி வாய்ப்புகளும் பெருகும்.

பரிகாரம்:  கிருஷ்ணகிரி மாவட்டம், தேவசமுத்திரம் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் காட்டுவீர ஆஞ்சநேயரை ஞாயிற்றுக்கிழமைகளில் வணங்கிட எதிலும் வெற்றி உண்டாகும்.  

12 ராசிகளுக்கான ஹேவிளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்!

கும்பம்:
உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் சந்திரன் இருக்கும்போது இந்த புத்தாண்டு பிறப்பதால், மற்றவர்கள் செய்ய முடியாத சவாலான காரியங்களையும் சாமர்த்தியமாகச் செய்து முடிப்பீர்கள். அடுக்கடுக்காக செலவுகள் வந்தாலும் அதற்கேற்ற வருமானமும் உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்பொழுது நிறைவேறும். அடிக்கடி பழுதான வாகனத்தைச் சீர் செய்வீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப நல்ல காற்றோட்டம், குடி நீர் வசதி உள்ள வீட்டுக்குக் குடியேறுவீர்கள். பிரபலங்களையும் நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொள்வீர்கள். 

வியாபாரம்: அதிகம் உழைக்க வேண்டி வரும். வேலையாட்களின் குறை, நிறைகளை அன்பாக சுட்டிக்காட்டி திருத்துங்கள். வைகாசி, ஆடி, ஐப்பசி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். கார்த்திகை, மார்கழி, மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.     

உத்தியோகம்: வேலைச்சுமை அதிகரிக்கும். உங்கள் திறமையை மூத்த அதிகாரி பரிசோதிப்பார். அடிக்கடி விடுப்பில் செல்வோரின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். கார்த்திகை, மாசி மாதங்களில் அலுவலகத்தில் உங்கள் நிலை உயரும்.  

மாணவர்கள்: சாதித்துக்காட்டவேண்டும் என்றால், கடுமையாக உழைத்துப் படிக்கவேண்டும். அன்றன்றைய பாடங்களை உடனுக்குடன் படித்துவிடுங்கள். விரும்பிய பாடப்பிரிவில் போராடித்தான் சேரவேண்டி வரும். 

கலைத்துறையினர்: விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உங்களின் படைப்புக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். வெளியாகாமால் இருக்கும் படம் ரிலீசாகும். 
இந்தப் புத்தாண்டு ஆடி மாதம் வரை உங்களை அலைக்கழித்தாலும், ஆவணி மாதம் முதல் எதிர்பாராத யோகங்களைத் தருவதாக அமையும். 

பரிகாரம்: பட்டுக்கோட்டை, பேராவூரணிக்கு அருகிலுள்ள பாலதள்ளி என்னும் ஊரில் எழுந்தருளியிருக்கும் விஷ்ணு துர்கை அம்மனை செவ்வாய்க்கிழமைகளில் எலுமிச்சைப் பழ தீபமேற்றி வணங்கிட சொத்துச் சேர்க்கை உண்டாகும்.

12 ராசிகளுக்கான ஹேவிளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்!

மீனம்:
ராகு 6-ம் வீட்டில் இருக்கும்போது இந்த வருடம் பிறப்பதால், வருமானம் அதிகரிக்கும். கடன் குறையும். வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். ஆடை, ஆபரணங்கள் சேரும். செவ்வாய் 3-ம் வீட்டில் நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால், தைரியம் கூடும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். மூத்த சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகம் ஆவார்கள்.  ஒரு பக்கம் பணம் வரும் என்றாலும் செலவுகள் இருமடங்காக இருந்துக் கொண்டேயிருக்கும். வேலைச்சுமை அதிகரிக்கும்.  சுப நிகழ்ச்சிகளாலும், நண்பர்கள், உறவினர்களின் வருகையாலும் வீடு களைகட்டும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். மகளுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

வியாபாரம்: தள்ளுபடி விற்பனை மூலம் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். சித்திரை, வைகாசி, ஆவணி மாதங்களில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். புது இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள்.  உணவு, ஷேர், கல்வி வகைகளால் ஆதாயம் உண்டு.   

உத்தியோகம்: உங்கள் நிலை உயரும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வைகாசி, ஆனி மாதங்களில் புது வாய்ப்புகள் வரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புடன் தேங்கிக் கிடந்த வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த சம்பள பாக்கியும் கைக்கு வரும். 

மாணவர்கள்: மதிப்பெண் உயரும். ஆசிரியர் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். கவிதை, கட்டுரை, விளையாட்டுப் போட்டிகளில் பரிசு உண்டு.  

கலைத்துறையினர்: பெரிய நிறுவனங்களின் அழைப்பு உங்களைத் தேடி வரும். வீண் வதந்திகளில் இருந்து விடுபடுவீர்கள். 
இந்தப் புத்தாண்டு உங்களின் சாதனைகளை அதிகப்படுத்துவதுடன் அடிப்படை வசதி, வாய்ப்புகளை அதிகப்படுத்துவதாகவும் அமையும். 

பரிகாரம்: திருச்சி லால்குடிக்கு அருகிலுள்ள மணக்கால் என்னும் ஊரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியசுவாமியை வணங்கி வர மேலும் சாதிப்பீர்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.