News
Loading...

இது புது குலேபகாவலி!

இது புது குலேபகாவலி!

ழுத்தில் ஒட்டி உரசும் பாசிமணிமாலை, இடது கை கட்டைவிரலில் திருஷ்டி மோதிரம், தலையில் மங்கி கேப், கலர்ஃபுல் வுல்லன் ஜெர்கின் என பிரபுதேவா இப்போது ‘குலேபகாவலி’. ‘தேவி’ கொடுத்த ஹிட்டில் செம ஸ்டைலீஷ் ஹன்சிகாவுடன் மாஸ்டர் அடுத்த ஆட்டத்திற்கு ரெடி. 

‘‘எனக்கு விபரம் தெரிஞ்ச வயசுல இருந்து நான் பிரபுதேவா சாரோட வெறித்தனமான ரசிகன். அவரோட ‘காதலன்’, ‘மிஸ்டர் ரோமியோ’ பாடல்களை ஆடியோவில் கேட்டால் கூட எனக்கு சாரோட எக்ஸ்பிரஷன்ஸும் அவரோட டான்ஸ் மூவ்மென்ட்ஸும்தான் மைண்ட்ல ஓடும். அதனால முழுக்க முழுக்க அவருக்காகவே இந்த ஸ்கிரிப்ட்டை உருவாக்கினேன். 

இவ்வளவு சீக்கிரம் சாரை டைரக்ட் பண்ணுவேன்னு நினைச்சுக் கூட பார்க்கலை...’’ நான்ஸ்டாப் நைட் ஷூட் பிரேக்கிலும் எனர்ஜியாக பேசுகிறார் ‘குலேபகாவலி’ கல்யாண் எஸ். இதற்கு முன் ‘கதை சொல்லப் போறோம்’, ‘காத்தாடி’ படங்களை இயக்கியிருக்கிறார். 

இது புது குலேபகாவலி!

பிரபுதேவாவின் லுக் பின்னியெடுக்குதே..?
தேங்க்ஸ் பாஸ். 1955ல வெளிவந்த ‘குலேபகாவலி’யை நாம இன்னிக்கும் ஞாபகத்துல வச்சிருக்கோம். அதே மாதிரி இந்த படமும் பேசப்படும். இது இப்போதைய சூழலுக்குத் தேவையான விஷயங்களோட, ஹிஸ்டாரிகல், காமெடி, ஆக்‌ஷன், சென்டிமென்ட்னு எல்லாம் கலந்த கலவையா மின்னும். 

சிலர்கிட்ட நாம கதை சொல்ல போகும் போது கதை மேல முழு கவனம் வைக்காம கேட்பாங்க. இன்னும் சிலர் தங்களோட மொபைலை நோண்டிக்கிட்டே கேட்பாங்க. ஆனா, பிரபுதேவா சார் கண்களை மூடி கவனமா உள்வாங்கி கதையை கேட்டு ரசிச்சார். ஹிஸ்டாரிகல் போர்ஷன்ல வித்தியாசமான பிரபுதேவாவை பார்க்கப் போறீங்க! 

‘குலேபகாவலி’னா என்ன அர்த்தம்..?
அப்படியே கொஞ்சம் கொஞ்சமா கதை என்ன? சீன் என்ன?னு கேட்க ஆரம்பிச்சிட்டீங்க போல..! ஷூட்டிங் ஆரம்பிச்சு ஒருவாரம்தான் ஆகுது. தீபாவளிக்குதான் வர்றோம். இந்தப் படத்தோட கதை ரெடியானதும் ‘குலேபகாவலி’ டைட்டில் பொருத்தமா இருக்கும்னு தயாரிப்பாளர் கோட்டப்பாடி ஜே.ராஜேஷ் சார்கிட்ட கேட்டேன். சம்பந்தப்பட்டவங்ககிட்ட பேசி அந்த கம்பீரமான டைட்டிலை வாங்கிக் கொடுத்தார். 

நயன்தாரா நடிக்கும் ‘அறம்’ படத்தை அடுத்து அவர் தயாரிக்கும் இரண்டாவது படம் இது. தயாரிப்பாளரா மட்டுமில்லாம நல்ல நண்பராகவும் இருக்கார். ஸ்பாட்டுக்கு வந்து எங்களை என்கரேஜ் பண்றார். சந்தோஷமா இருக்கு. ‘குலேபகாவலி’ ஒரு ஊரா? நாடா? காடா? இல்லை வேற ஒரு விஷயமா என்பதை இப்பவே சொன்னால் சஸ்பென்ஸ் போயிடும். தீபாவளி வரை கொஞ்சம் காத்திருங்க. 

இந்தப்படத்துல பிரபுதேவா தவிர, ஹன்சிகா, ரேவதி, மன்சூரலிகான், சத்யன், யோகிபாபு, ராஜேந்திரன், மதுசூதனன்னு கலகலப்புக்கு கேரண்டியான நடிகர்கள் நிறைய இருக்காங்க. பாலிவுட்ல பத்து படங்களுக்கு மேல ஒர்க் பண்ணின ஆனந்த்குமார், தமிழில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். நான் குறும்படங்கள் இயக்கின காலங்களில் இருந்து என்னோட ஒர்க் பண்ற விஜய் எடிட்டிங் பண்றார். படத்தோட மியூசிக் டைரக்டர் பெயரை சஸ்பென்ஸா வச்சிருக்கோம்! 

செங்கல்பட்டு, ஈ.சி.ஆர்.னு சென்னையைச் சுத்தி உள்ள இடங்கள்லதான் ஷூட்டிங். ஒரு பாடலுக்காக பாங்காக் போக திட்டமிட்டிருக்கோம். இந்தப் படத்தோட கதையை ஹன்சிகாவுக்கு மும்பையில அவரோட வீட்ல போய் சொல்லிட்டு வந்தோம். கதை கேட்கும் போது நிறைய இடங்கள்ல சிரிச்சாங்க. அவங்க இதுல செம மாடர்ன் கேரக்டர் பண்ணியிருக்காங்க. பிரபுதேவா டைரக்‌ஷன்ல அவங்க நடிச்சிருக்கறதால ஒர்க் வாங்குறது எனக்கு ஈஸியா இருக்கு. ரேவதி மேடத்துக்கும் இதுல வெயிட்டான ரோல்!

பிரபுதேவாவுக்கு, நீங்க கிட்டத்தட்ட ஒரு புது இயக்குநர் மாதிரி... அவர்கிட்ட உங்களால ஈஸியா வேலை வாங்க முடியுதா?
என்ன இப்படி கேட்டுட்டீங்க. சார் ரொம்ப ஃப்ரெண்ட்லி. பொதுவா தியேட்டர்ல படம் தொடங்கின பத்து நிமிஷத்துல கதைக்குள்ல நாம போயிடணும். அதான் நல்ல திரைக்கதைக்கான அடையாளமா நினைக்கறேன். இந்தப் படத்தோட கதை தொடங்கின சில நிமிடங்கள்லேயே நீங்க இன்வால்வ் ஆகிடுவீங்க. அப்படி ஒரு grip ஸ்கிரிப்ட். 

சாரே பெரிய இயக்குநர். அதனால பத்து சதவிகிதம் நாம விளக்கினா போதும். மீதி தொண்ணூறு சதவிகிதம் அவரே போட்டு நூத்துக்கு நூறு அவுட்புட் கொடுத்திடுறார். குறிப்பா சொல்றதா இருந்தா நம்ம மனசுக்குள்ள ஊடுருவி, நாம நினைக்கற ஃபீலை கொண்டு வரதுல சார் கெட்டிக்காரர். எந்த தயக்கமும் பயமும் இல்லாம அவர்கிட்ட ஒர்க் பண்ண முடியும். 

நீங்க இயக்குநரான ஃப்ளாஷ்பேக் ப்ளீஸ்..?
சொந்த ஊர் இந்த சிங்காரச் சென்னை. சின்ன வயசில இருந்து கதைகள் எழுதுறதுல ஆர்வம் உண்டு. அப்படியே ஷார்ட் ஃபிலிம் ஆசை வந்திடுச்சு. நாளைய இயக்குநர் சீஸன்2ல நான் இயக்கின ‘புதியவன்’ குறும்படத்துக்கு எக்கச்சக்க ரெஸ்பான்ஸ். அப்படியே ‘கத சொல்லப்போறோம்’ இயக்கும் வாய்ப்பு வந்தது. 

உங்க இயக்கத்துல தன்ஷிகா நடித்த ‘காத்தாடி’ ஏன் இன்னும் ரிலீஸ் ஆகலை?
‘காத்தாடி’ பிளாக் காமெடியும் ஆக்‌ஷனும் கலந்த கதை. ஸ்ரீதேவியின் சித்தி மகனும், மகேஸ்வரியின் சகோதரருமான அவிஷேக் ஹீரோ. தன்ஷிகா ஹீரோயின். ஆக்‌ஷன் சீக்குவென்ஸுக்காக நிஜமாவே சிலம்பம் கத்துக்கிட்டு வந்து தன்ஷிகா நடிச்சுக் கொடுத்தாங்க. கடந்த டிசம்பருக்கு முன்னாடியே படத்தை வெளியிட திட்டமிட்டோம். 

தெலுங்கில் டப் பண்ண வேண்டியிருந்தது. அதை முடிச்சதும் பழைய நோட்டு செல்லாது என்கிற அறிவிப்பு. அப்புறம் முதல்வர் ஜெயலலிதா மறைவு. இப்படி சில காரணங்களால் ரிலீஸை தள்ளி வைக்க வேண்டியதாகிடுச்சு. நான் இயக்கின ‘கத சொல்லப்போறோம்’ல சென்டிமென்ட் சீன்கள் பேசப்பட்ட்டது. அதே மாதிரி ‘காத்தாடி’யும் ஆடியன்ஸை கவர்ந்திழுக்கும். ஜூன்ல ரிலீஸ்பண்ண ப்ளான் பண்றோம்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.