உலகின் பெரும்பாலான நிறுவனங்களை அச்சுறுத்தி வரும் ரான்சம்வேர் வைரஸ் ரஷ்யாவின் உள்துறை அமைச்சகத்தையும் விட்டு வைக்கவில்லை. ரான்சம்வேர் பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள ரஷ்யா அதிகாரிகள் புனித நீரின் உதவியை நாடியுள்ளனர்.
அதன்படி ரஷ்யாவின் உள்துறை அமைச்சக கணினிகளை ரான்சம்வேர் பாதிப்பில் சிக்காமல் காக்க, பிரார்த்தனை செய்யும்படி ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தின் உதவியை உள்துறை அமைச்சக அதிகாரிகள் நாடினர். ரஷ்யாவை பொருத்த வரை ஆர்த்தடாக்ஸ் தேவாலயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகின்றது.
உள்துறை அமைச்சகத்தின் அழைப்பை ஏற்று அமைச்சகத்தின் வளாகத்திற்கு வந்த தேவாலய பாதிரியார்கள் சிறப்பு பிரார்த்தனை செய்து அங்கிருந்த கணினி மற்றும் உள்துறை அமைச்சகத்தின் சர்வர்களில் புனித நீர் தெளித்தனர்.
இதைத் தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டுள்ளதால் கணினிகளில் ரான்சம்வேர் பாதிப்பு ஏற்படாது என்றும் ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் தேவாலயம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
Russian priest blessing missiles to be used in Syria.
அப்பாவி மக்களை கொள்ளத் தயாராக இருக்கும் ஏவுகணைக்கு ஆசிர்வாதம் செய்த ரஷ்ய பாதிரியார். ரஷ்யாவில் கிருஷ்துவ மத மூடநம்பிக்கை தலைவிரித்தாடுகிறது
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.