திருப்பூர், வீரபாண்டி பகுதியில் நேற்று இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தொழிலாளி சுரேஷ் இரு சக்கர வாகனத்தில் நிற்காமல் சென்றுள்ளார். உடனே போலீசார் துரத்தி சென்றதால் நிலை தடுமாறி கீழே விழுந்து சுரேஷின் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது.இதில் சம்பவ இடத்திலே சுரேஷ் பலியானார்.
போலீசாரின் இச்செயலை கண்டித்து பொதுமக்கள் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளி சுரேஷ் உயிரிழக்க காரணமான காவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில், வாகன சோதனை என்ற பெயரில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் போலீசார் கலெக்ஷனில் ஈடுபட்டு வருகின்றனர்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வீட்டுக்கு செல்லும்போது ஒரு தொகையை வீட்டுக்கு எடுத்துச் செல்வதற்காகவே போலீசார் இத்தகைய செயலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, இதுகுறித்து போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.