News
Loading...

ரீடிங் ஹீரோயின்ஸ்!

ரீடிங் ஹீரோயின்ஸ்!

‘‘ஷூட்டிங் பிரேக்ல என்ன பண்ணுவீங்க..?’’; ‘‘உங்க ஹாபி எது..?’’ இப்படியான ஸ்டீரியோ டைப் கேள்விகளைக் கண்டு ஹீரோயின்கள் எப்போதும் மிரளுவதில்லை. அவர்களுக்குள்ளாவே புன்சிரிப்பும் பூங்கொத்தும் ததும்ப ‘‘Reading Books... Listening Music... Watching Movies...’’ என ரெடிமேட் பதில் ஒன்றை எப்போதும் வைத்திருப்பார்கள் பாலிவுட் to கோலிவுட் ஹீரோயின்கள். 

ஆனால், இது ‘ச்ச்ச்சும்மா’ ஸீன் காட்டும் பதிலல்ல. யெஸ். நிஜமாகவே புத்தகம் படிக்கும், இசையைக் கேட்கும், படங்களை விரும்பிப் பார்க்கும் வழக்கம் நடிகைகளிடம் இருப்பது ஆச்சரிய அட்ராசிட்டி.

* ஜிம்மில் மணிக்கணக்கில் ஃபிட்னஸுக்காக கவனம் செலுத்தும் beach babe + travelling bird அமலாபாலுக்கு morning wisdom ரக quotes மற்றும் தத்துவங்களைத் தேடிப்பிடித்து வாசிப்பது பிடிக்கும். 

* ‘பாகுபலி 2’ முடித்துவிட்டு இப்போதுதான் ரிலாக்ஸ் ஆக ஆரம்பித்திருக்கிறார் அனுஷ்கா. தனது தோழியும் ‘இஞ்சி இடுப்பழகி‘ படத்தின் கதாசிரியையுமான கனிகா தில்லான் எழுதிய ‘The Dance of Durga’ நூலையே இப்போது படிக்கிறாராம்.

ரீடிங் ஹீரோயின்ஸ்!

* ஸ்ருதிஹாசன் முதலில் ஒரு Cat lover. அதன்பிறகே books. அதிலும் பூனைக்குட்டி தொடர்பான புத்தகங்கள் என்றால் உடனே வாசித்து விடுவது ஸ்ருதியின் ஸ்பெஷல். ‘I Am Pusheen the Cat’. ‘Mostest adorable book ever! Missing my Kitty Cat’’ என்கிறார் ஸ்ருதி.

* பூனம் பஜ்வா வீட்டில் லைப்ரரியே இருக்கிறது. பிடித்த புத்தகங்களைப் பார்த்ததும் வாங்கிக் குவித்து விடுகிறார். ‘‘ஐ லவ் புக்ஸ். ஏர்போர்ட்ல ஃபிளைட்டுக்காக வெயிட் பண்ற டைம்ல அங்க இருக்கிற ஸ்டாலுக்கு போவேன். நின்னுகிட்டே புக்ஸ் வாங்கி அங்கயே படிக்க ஆரம்பிச்சிடுவேன்...’’ என்கிறார்.

* ஸ்டெல்லா மேரீஸில் படித்த பெண் என்பதாலோ என்னவோ புத்தகங்கள் படிக்கும் பழக்கம் சமந்தாவிற்கு எப்போதும் உண்டு. சமீபத்தில் அரை டஜன் நூல்களை வாசித்ததாக ‘நாகா’த்தம்மன் மீது சத்தியம் செய்கிறார்!

ரீடிங் ஹீரோயின்ஸ்!

* ‘முகமூடி’ பூஜா ஹெக்டேவை நினைவிருக்கிறதா? பாலிவுட் ரேஸில் முன்னணியில் இருப்பவர். அக்மார்க் ‘Harry Potter’ சீரிஸ் விசிறி. அனைத்து பாகங்களும் அவரது பர்சனல் கலெக்‌ஷனில் இருக்கின்றன.

* சினிமா தொழில்நுட்பம் தொடர்பான புத்தகங்கள் என்றால் விரும்பி வாசிப்பது நித்யா மேனனின் ஸ்பெஷல். 

* ஆங்கில நாவல்கள் அதிகம் படித்து வரும் பிரியங்கா சோப்ரா, சமீபத்தில் படித்து ரசித்தது ஐஸ்வர்யா தனுஷ் எழுதிய ‘Standing on the Apple Box’.

ரீடிங் ஹீரோயின்ஸ்!

* அஜித்தின் படப்பிடிப்பிற்காக சமீபத்தில் செர்பியா சென்ற காஜல் அகர்வால், அங்கே ஏர்போர்ட்டில் நிறைய ஆங்கில நாவல்கள் வாங்கிக் குவித்திருக்கிறார். ஹாலிவுட் படங்கள் அதிகம் பார்க்கும் காஜலின் ஃபேவரிட் மூவி, ‘Notting Hill’. ‘‘My favourite Rom-Com! The purest form of brilliant dialogue writing and acting... I could watch this one over and over again any day!’’ என்கிறார் காஜல்.

* மராத்தி தியேட்டர் ஆர்ட்ஸ் தொடர்பான புத்தகங்கள் வாசிப்பது ராதிகா ஆப்தேவிற்கு பிடித்தமானது. படித்ததை குறிப்பெடுத்துக் கொள்ளும் நல்ல பழக்கமும் இவரிடம் உண்டு.  

* சம்மருக்கு சம்மர் ஏதாவது ஒரு நாட்டிற்கு சுற்றுலா செல்வது ரெஜினாவுக்கு இனிக்கும் ஹாபி. ஆங்கில நாவல்களை விரும்பிப் படிப்பவர், சமீபத்தில் வாசித்தது... ‘Hunted, Imprisoned, She’ll never beg for Mercy’.

* சினிமா சான்ஸ் தொய்வுறும் காலகட்டங்களில் ‘பெயின்ட்டிங் வரைய பிடிக்கும்... ஓவியக்கண்காட்சி வைக்கப்போறேன்...’ என ஸ்டேட்மென்ட் விடுக்கும் ஹன்சிகாவிடம் படிக்கும் பழக்கம் குறைவு. ‘Fifty Shades of Grey’ சமீபத்தில் அவர் வாசித்த புத்தகம்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.