News
Loading...

Enter the Robot DRAGON!

Enter the Robot DRAGON!

லகில் எந்த மூலையிலும் கிடைக்கும் குண்டூசி முதல் சூப்பர் டெக்னோ கம்ப்யூட்டர் வரை எதை பார்ட் பார்ட்டாக பிரித்தாலும் பொருட்கள் மாறுமே தவிர, ‘Made in China’ ஸ்டிக்கர் மட்டும் மாறவே மாறாது. எலைட் போனான ஆப்பிளிலும் கூட சீனாவின் சரக்குண்டு. தில்லுக்கு துட்டு என இறங்கி அடித்து, அமெரிக்காவுக்கே பீதி கிளப்பும்படி டன் கணக்கிலான மனித வளத்தின் மூலமே தன் சல்லீசு ரேட் வியாபார சாம்ராஜ்யத்தை கட்டியாளும் டிராகன் தேசம் அது. 

கட்டரேட் கில்லி என்றாலும், ரோபாட்டுகளை பயன்படுத்தி அப்பேட் ஆவதில் கடைசி ஆளாகத்தான் சீனா நிற்கிறது. இப்படியே இருந்தால் எப்படி என தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டார்களோ என்னவோ... 2025ம் ஆண்டுக்குள் சில சாதனைகளை முறியடிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் களமிறங்கி இருக்கிறது. 

ரயில்கள் மற்றும் புதுப்பிக்கும் ஆற்றல் துறையில் உள்ள ரோபாட்டுகளின் வளர்ச்சி, ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ், டிரைவரில்லாத கார்கள், டிஜிட்டலாக இணையும் பொருட்கள்... என காலத்துக்கு ஏற்ப அப்டேட் ஆக முடிவு செய்துவிட்டார்கள். ‘‘சீன வளர்ச்சியின் அடிப்படையே புதிய விஷயங்களை வேகமாகக் கற்று அதனைப் பின்பற்றுவதுதான்.

Enter the Robot DRAGON!

இங்கு கேள்வி அவை புதுமையானதா, இல்லையா என்பதுதான்!’’ என அதிரடிக்கிறார் மாசாசூசெட்ஸைச் சேர்ந்த பாதுகாப்பு ரோபாட் நிறுவனமான ஐரோபாட் நிறுவனத்தின் இயக்குநரான கோலின் ஏஞ்சல். ரோபாட்டுகளை பயன்படுத்துவதில் தென்கொரியா, ஜெர்மனி, அமெரிக்காவுக்குப் பிறகே சீனாவுக்கு இடம். இதை மாற்றத்தான் குவாங்டாங் பகுதியிலுள்ள இரண்டாயிரம் கம்பெனிகளுக்கு 137 பில்லியன் டாலர்களை மானியமாக அள்ளிக் கொடுத்துள்ளது சீன அரசு. 

எதற்கு? வீட்டுப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் உள்பட அனைத்து தொழிற்சாலைகளையும் ரோபாட்டுகளால் நவீனப்படுத்தத்தான். உள்நாட்டிலுள்ள இ தியோடர், அன்ஹூயி, ஷியாசன் ஆகிய நிறுவனங்களோடு, ஜப்பானின் ஃபானக், அமெரிக்காவின் அடெப்ட் ஆகிய வெளிநாட்டு உதவிகளையும் மறுக்காமல் ஏற்று சீனா தன்னை ரோபாட்டிக்ஸ் துறையில் வளர்க்க நினைப்பது காலத்தின் கட்டாயம்.

Enter the Robot DRAGON!

கடந்தாண்டு 90 ஆயிரம் ரோபாட்டுகளை வேகமாக நிறுவியிருப்பதும் கூட இந்த நோக்கத்தில்தான். இதில் அட்டகாச முன்னேற்றமாக ஸெங்சூ ரயில்வே ஸ்டேஷனிலுள்ள காற்று மாசு ரோபாட், 6 ஆயிரம் மீட்டர் கடலில் செல்லும் ஆழ்கடல் ரோபாட் ஆகிய இரண்டையும் குறிப்பிடலாம். 

‘மேக் இன் சீனா 2025’ என்ற ஐந்தாண்டு திட்டப்படி, 31% ரோபாட்டுகளாக இருக்கும் இப்போதைய நிலையை, 50% ஆக உயர்த்துவதுதான் இதன் லட்சியம். இதற்காக இலவச நிலம், குறைந்த வட்டியில் கடன்கள் என அரசு அள்ளித்தரும் சலுகைகளைப் பெற சீன நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. இந்த சூழலில்தான் முக்கியமான கேள்வியை எழுப்பியிருக்கிறார் ஷின்குவா பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் இணைய வர்த்தக தொழில்நுட்ப துறையின் இயக்குநரான சாய் யூதிங்.

Enter the Robot DRAGON!

‘‘ஜப்பான், அமெரிக்காவிலிருந்து பாகங்களைப் பெற்று அதில் தங்கள் பிராண்ட் பெயரை இணைத்து ரோபாட்டுகளை உருவாக்கினால் சீனா எப்படி வளரமுடியும்? இங்கு பல புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இப்படித்தான் செயல்படுகின்றன!’’ என்கிறார். சரி. தொழிலாளர்களின் கதி? ‘‘திறமையான தொழிலாளர்கள் இப்போது குறைவு. 

உயர்ந்து வரும் சம்பளம், ஒரே மாதிரியான வேலையை செய்ய விருப்பமில்லாத இன்றைய இளைஞர்களின் மனநிலை ஆகியவை எல்லாம் ரோபாட்டுக்கு ஆதரவாக இருக்கின்றன...’’ என்கிறார் ஏபிபி ரோபாட்டிக்ஸ் இயக்குநரான ஜேம்ஸ் லீ. இ தியோடர் என்ற ஸ்டார்ட் அப்பை 2015ம் ஆண்டு தொடங்கிய நிங்போ டெக்மேஷன் நிறுவனத்தின் மேலாளரான மேக்ஸ் சூ, ‘‘மக்கள் எங்களிடம் நீங்கள் எதுவரை ரோபாட்டுகளை தயாரிப்பீர்கள் என்று கேட்கிறார்கள்.

Enter the Robot DRAGON!

பதில் ரொம்பவே சிம்பிள். தொழிற்சாலையில் ஒரு மனிதர் கூட வேலை செய்யக்கூடாது என்ற நிலை வரும் வரையில் தயாரிப்போம்...’’ என புன்னகைக்கிறார். ஆக, மனிதர்களுக்கும் ரோபாட்டுகளுக்குமான போட்டி தொடங்கிவிட்டது!

ரோபாட் டேட்டாஸ்

தென் கொரியா 531 ரோபாட்டுகள்.
ஜெர்மனி 301 ரோபாட்டுகள்.
அமெரிக்கா 176 ரோபாட்டுகள்.
சீனா 49 ரோபாட்டுகள்.
தானியங்கி ரோபாட்டிக்ஸ் சந்தை மதிப்பு 5.07 பில்லியன் டாலர்கள் (2016).
2021ல் உயரும் ரோபாட்டிக்ஸ் மதிப்பு - 8.44 பில்லியன் டாலர்கள்.
(researchandmarkets.com தகவல்படி)

சீன ரோபாட்டுகளில் பிறநாட்டுப் பொருட்கள் 69%
2020ல் உயரும் ரோபாட்டுகளின் அளவு 1 லட்சம்
உலகச்சந்தையில் சீனாவின் பங்கு 27 (தொழிற்சாலை ரோபாட் தயாரிப்பு)
ரோபாட்டுகள் இறக்குமதிச் செலவு 3 பில்லியன் டாலர்கள்
பில்லியன் டாலர்கள்
(stats.gov.cn தகவல்படி)

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.