News
Loading...

உங்கள் பழம் அமுதா விஷமா?

உங்கள் பழம் அமுதா விஷமா?

ல்லா சீசன்களிலும் மாம்பழம் கிடைக்கவேண்டும் என ஆசைப்படும் ஜெனரேஷன் நம்முடையது. சீசன் தாண்டியும் பல்வேறு பழங்கள் சூப்பர் மார்க்கெட்டுகளிலும், பழக்கடைகளிலும் விற்கப்படுகின்றன. உண்மையில் பழங்கள் எப்படி புல்லட் ட்ரெயின் வேகத்தில் தயாராகின்றன? கெமிக்கல்ஸ்தான் காரணம். சந்தையில் விறுவிறுவென விற்பனையாகும் பழங்கள், அதிலுள்ள கெமிக்கல்கள், பாதிப்புகளிலிருந்து தப்பிப்பது பற்றி ஒரு எக்ஸ்‌ரே பார்வை! 

மாம்பழம்:
சூப்பர் மார்க்கெட்டுகளிலுள்ள அல்போன்ஸா, இமாம்பசந்த், பங்கன பள்ளி என மாம்பழங்களின் வகைகளையும் விலைகளையும் தாண்டி பலரும் டக்கென தேர்ந்தெடுப்பது மஞ்சள் நிற பழங்களைத்தான். நிறம் தவிர்த்து பழம் நல்ல மணமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கினால் உடலுக்குள் பாயும் நச்சுகளுக்கு கேட் போடலாம். இயற்கையாக பழுத்த பழங்களைப் போல் இல்லாமல் செயற்கை கனிகளில் சாறு குறைவாக, பழுக்காமல் இருக்கும். 

இதற்கு பயன்படுவது, பவுடர், மசாலா என செல்லமாக அழைக்கப்படும் நெ.1 மலிவுவிலை கெமிக்கலான கால்சியம் கார்பைட். இதனை நீரில் நனைத்தால் உருவாகும் அசிட்டிலின் வாயுவிலுள்ள ஆர்சனிக், பாஸ்பரஸ் உள்ளிட்ட நச்சுகளால் தலைவலி, மனநிலைக்கோளாறு, உறக்கமின்மை, புற்றுநோய், வயிற்றுப்போக்கு, தோல்நோய்கள், ஞாபகமறதி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.

என்ன செய்யலாம்? 
குழாய்நீரை பழங்களின் மீது வேகமாகப் பாய்ச்சி கழுவி, சில நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் சாப்பிடலாம்.  

தர்ப்பூசணி:
தகிக்கும் அனலில் தர்ப்பூசணி சாப்பிடாவிட்டால் கோடையைக் கடப்பது எப்படி? வெட்டிவைத்த தர்ப்பூசணியின் ஈர்ப்பே அதன் சிவப்பு நிறம்தான். அதை கச்சிதமாக கால்குலேட் செய்த வியாபாரிகளின் கைவண்ணம்தான் செயற்கை சாயங்கள். எரித்ரோசின் பி, ரெட் 3 ஆகிய கெமிக்கல்ஸ்தான் தர்ப்பூசணியின் செக்கச்செவேல் நிறத்திற்கு ஆதாரம். எரித்ரோசின் பி-யில் உள்ள அயோடின், சோடியம் ஆகியவை உடலில் தைராய்டு தொடர்பான நோய்களைத் தூண்டுகின்றன. 

கார்பைடு, லெட் குரோமேட், மெத்தனால் யெல்லோ, சூடான் ரெட் ஆகிய வேதிப்பொருட்களை தர்ப்பூசணிப்பழத்தின் ராக்கெட் வேக வளர்ச்சிக்காகவும், தேன்சுவை இனிப்பிற்காகவும் அள்ளிக்கொட்டுகின்றனர். லெட் குரோமேட்டினால் தோல் அலர்ஜி, நரம்பு மண்டலம், சிறுநீரகம், மூளை உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்படுவதோடு, சூடான் ரெட் என்ற செயற்கை சாயத்தால் புற்று நோயும் ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.  

எப்படிக் கண்டறிவது? 
தர்ப்பூசணி பழத்தின் மேலே கருப்பு நிறத்தில் திட்டுக்கள் காணப்பட்டால் சந்தேகமே வேண்டாம், அவை கண்டிப்பாக வேதிப்பொருட்களின் விளைச்சலேதான். 

வாழைப்பழம்: 
அனைத்து சீசன்களிலும் கிடைக்கும், பர்ஸை கடிக்காத பழம். வாழைப்பழங்களை அவை பழுக்க ஒரு மாதம் இருக்கும்போது அசிட்டிலின் வாயு நிரம்பிய அறையில் போட்டு பழுக்க வைக்கிறார்கள். வேதிக்கலவையில் முக்கி எடுக்கப்பட்ட வாழைப்பழங்கள் பின்னர் வேதிவாயு நிரம்பிய அறையில் பழுக்க வைக்கப்படுகின்றன. 

என்ன செய்யலாம்?
தோலை முழுவதுமாக நீக்கியபின் வாழைப்பழத்தை சாப்பிடுவது பக்கவிளைவுகளின் பாதிப்பைக் குறைக்கும். 

ஆப்பிள்:
இப்போது தினம் ஒரு ஆப்பிளை சாப்பிட்டால் நிச்சயம் டாக்டரிடம் சிகிச்சைக்கு செல்ல வேண்டி வரும். காரணம், மெருகு குறையாது மினுமினுக்கும் மெழுகுதான். அங்காடிகளிலுள்ள ஆப்பிள்கள், செழுமை இழக்காமலிருப்பது அதில் பூசப்பட்டுள்ள மெழுகுப்பூச்சினால்தான். பலரும் அப்படியே கடித்துத் தின்னும் ஆப்பிள், ஷெல்பில் ஏற்றப்பட்டு ஓர் ஆண்டு கூட ஆகியிருக்கலாம் என உணவு வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.

என்ன செய்யலாம்?: 
வினிகரில் ஆப்பிள் பழங்களை நன்கு கழுவி, தோலை உரித்துவிட்டு சாப்பிடலாம்.

திராட்சை:
உங்களுக்கு எப்போதாவது பழங்களை சாப்பிட்டுவிட்டு குமட்டல் ஏற்பட்டு வாந்தி எடுத்திருக்கிறீர்களா? ‘ஆமாங்க ஆமாம்’ என்றால் நீங்கள் சாப்பிட்ட பழங்களிலுள்ளது பென்ஸைன் ஹெக்ஸாகுளோரைடு (BHCl) என்பது உறுதி. பழங்களை நீங்கள் உருட்டி புரட்டி தண்ணீரில் கழுவினாலும் பிஹெச்சிஎல் சிறிதும் பழங்களிலிருந்து நீங்காமல், தசைவலி மற்றும் குமட்டலை உடலில் ஏற்படுத்துகிறது. கல்லீரலை கபளீ
கரம் செய்யும் இந்த பிஹெச்சிஎல் பெருமளவு திராட்சைகளை பழுக்க வைக்கும் செயல்முறையில் பயன்படுகிறது. 

என்ன செய்யலாம்?: 
உப்பு, பேக்கிங் சோடாவை நீரில் கரைத்து அதில் திராட்சைகளைக் கழுவிச் சாப்பிடலாம். 

சட்டமும் தொழில்நுட்பமும்!

உணவு பாதுகாப்பு மற்றும் கலப்படச்சட்டம் 2006, 2011ன் படி பழங்களை பழுக்க வைக்க கார்பைடு கல் பயன்படுத்துவதை இந்திய அரசு தடை செய்துள்ளது. 2010ம் ஆண்டு இந்திய உணவு மற்றும் பாதுகாப்பு தரக்கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI), பழங்களை பழுக்க வைக்க எத்திலின் வாயுவை பயன்படுத்த அனுமதித்துள்ளது.  

அண்மையில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் உணவு ஆராய்ச்சித்துறை மாணவர்கள் பிரதாப்குமார் ஷெட்டி தலைமையில் கண்டுபிடித்துள்ள கார்பைடு பழங்களைக் கண்டறியும் டெஸ்ட்டிற்கான செலவு 20 பைசா. நீரில் இந்த புதிய சொல்யூஷனை கலந்துவிட்டு, பழங்களை அலசும்போது, நீரின் நிறம் மாறினால் அது கார்பைடு பழம். நிறம் மாறவில்லையெனில் அது இயற்கையான பழம்.

நல்ல பழம் எது? 

வசீகரிக்கும் விதமாக, அதே நேரம் ஒரே நிறத்தில் இல்லாமல், நல்ல எடையில், புதிய மணத்துடன், இனிப்பாக இருக்கும். பழங்களை அப்படியே சாப்பிடாமல் தோலை நீக்கி, துண்டுகளாக வெட்டி சாப்பிடலாம். அந்தந்த சீசனுக்குரிய பழங்களை மட்டும் சாப்பிடுவது நோய்களைத் தவிர்க்கும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.