24 மணி நேரமும் தேசிய நெடுஞ்சாலையில் பாதுபாப்பு பணிக்காக மூன்று சிப்ட் முறையில் காவலர்களை நியமித்து அவர்களுக்கு ஹை வே பேட்ரோல் என பெயரிட்டு வாகனமும் வழங்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலையில் திடீர் விபத்து அசம்பாவிதங்கள் நடந்தால் அடுத்த சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு அவர்கள் செல்லவேண்டும்.
இவர்கள் சரியாக பணி செய்கிறார்களா என்பதை மாவட்ட எஸ்.பி.,அலுவலங்களில் இருந்து ஜி.பி.ஆர்.,கருவி மூலம் கண்காணிப்பது வழக்கம்.
அப்படி பொறுப்பான பணியில் இருப்பவர்கள் சிலர் பொறுப்பில்லாமல் செயல்படுகின்றனர், அதற்கு ஒரு உதாரணம்.
சேலத்தில் இருந்து வாழப்பாடி சென்ற சமூக சேவகர் ஒருவர், சேஷன்சாவடி பகுதியில் பள்ளி வளாகப்பகுதியில் ஹைவே பேட்ரோல் வாகனம் ஒன்று நின்றதை கவனித்துள்ளார். அருகில் சென்று பார்த்தால் பணியில் இருந்த போலீஸ் பள்ளி வளாகத்தில் கைலி கட்டி பனியனுடன் படுத்து குறட்டை விட்டு தூங்கி கொண்டிருந்துள்ளனர்.
அவரை தட்டி எழுப்பி டூட்டி நேரத்தில் இப்படி தூங்கலாமா என கேள்வி கேட்டுள்ளார். அதையடுத்து அவசர கதியில் எழுந்து யூனிபார்மை அணிந்து கொண்டு, வேகமாக வாகனத்தை எடுத்து கொண்டு, டூட்டிக்கு புறப்பட்டுள்ளனர்.
இது போன்ற தவறுகளை கண்காணிக்கும் மாவட்ட எஸ்.பி.,அலுவலகம் இவர்களுக்கு உடந்தையாக செயல்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது. கவனிக்குமா காவல் துறை?
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.