கருத்து வேறுபாடு தோன்றும்போது முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்யக் கூடாது என்று கணவருக்கு மதகுருமார்கள் அறிவுறுத்த வேண்டும் என்பதை அவர்களிடம் வலியுறுத்துவோம் என்று அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
முத்தலாக் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது, இந்நிலையில் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கூறியிருப்பதாவது:
திருமணச் சடங்கின் போது திருமணத்தை நடத்தி வைப்பவர், கருத்து வேறுபாடு ஏற்படும் போது மும்முறை தலாக் கூறி விவாகரத்து செய்யக் கூடாது என்று மணமகன்/கணவரிடம் ஆலோசனை வழங்க வேண்டும். ஏனெனில் ஷரியத் படி அவ்வாறு விவாகரத்து செய்வது விரும்பத்தகாத நடைமுறை, என்று அறிவுறுத்துவது அவசியம் என்ற ஆலோசனையை ‘குவாஜிகளுக்கு’ அளிப்போம், என்று உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.