தமிழகத்தில் மிகப்பெரிய மார்கெட் என்று சொல்லகூடிய கோயம்பேடு மார்கெட், சுமார் 65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தமிழகம் மட்டும் அல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் தினமும் காய்கறி, பழம், பூக்கள் டன் கணக்கில் 500 லாரிகளில் விற்பனைக்காக இங்கு வருகிறது.
இந்த மார்கெட்டில் 2700 காய்கறி கடைகள், 750பழக்கடைகள், 450 பூக்கடைகள் என முறையாக அங்கிகாரம் பெற்ற 3800க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டுவருகின்றன. இது சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.,) கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
தினமும் வெளியில் இருந்து காய்கறி வியாபாரிகள் பொதுமக்கள் என 68 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். இந்த மார்கெட்டை நம்பி, 10 ஆயிரம் கூலி தொழிலாளிகள் பிளைப்பு நடத்திவருகின்றனர்.
24 மணிநேரமும் செயல்பட்டுவரும் இந்த மார்கெட்டில் பல்வேறு சமூக விரோத செயல்கள் சமீப காலமாக அரங்கேறி வருகிறது. குறிப்பாக ஒரு நம்பர் லாட்டரி சீட் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. போலீஸார் சிலரை பெயரளவில் கைது செய்வதும் வாடிக்கையாக நடந்துவருகிறது.
சமூக விரோதிகள் கூடாரமாக சிலர் கோயம்பேடு மார்கெட்டை பயன்படுத்துகின்றனர். கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவோர்கள் தங்கள் பயன்படுத்தும் திருட்டு வாகனங்களை கோயம்பேடு பஸ் நிலையத்தில் நிறுத்தி விட்டு செல்கின்றனர். அதை போலீஸார் கண்டு கொள்வதில்லை.
தினமும் பல கோடி ரூபாய் பறிமாற்றம் நடக்கும் இந்த மார்கெட்டில் விபச்சார அழகிகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. இதற்காகவே மார்கெட்டில் ஏஜண்ட்கள் பலர் வலம் வருகின்றனர். பெரிய வியாபாரிகள் முதல் கூலி தொழிலாளர்கள் வரை அவர்கள் வசதிக்கு ஏற்ப அழகிகளை சப்ளை செய்கின்றனர்.
மார்கெட் இரவு நேரத்தில் லோடுகள் வந்து அதிகாலை விற்பனை முடிந்து காலை 10 மணிக்கு சற்று ஒய்வாக இருக்கும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மார்கெட்டில் பல கடைகளை இந்த பலான தொழிலுக்கு பயன்படுத்துகின்றனர்.
கூலிவேலை செய்வோர்கள் முதல் பெரிய வியாபாரிகள் வரை தங்கள் வேலையை முடிந்து விட்டு, பணத்துடன் இருக்கும் நேரம் பார்த்து இந்த விபச்சார அழகிகள் மார்கெட்டில் வலம் வந்து, அவர்களை சந்தோஷப்படுத்திவிட்டு, ரூ 500 முதல் ஆளை பொறுத்து லட்சகணக்கில் பணத்தை பிடிங்கி சென்று விடுகின்றனர்.
இரவு முழுவதும் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அற்ப ஆசைக்காக இது போன்ற விபச்சாரிகளிடம் பணத்தை இழந்து செல்வது வாடிக்கையாக நடந்து வருகிறது.
நாளுக்கு நாள் பெருகிவரும் இந்த தொழில் நகர போலீஸார்களுக்கு தெரிந்தே நடக்கிறது. அவர்களுக்கு ஏஜண்ட்கள் மூலம் வரவேண்டிய மாமூல் வந்து விடுகிறது ஆகவே அவர்கள் கண்டு கொள்வது இல்லை.
தட்டிகேட்கவேண்டிய போலீஸாரை இது போன்று நடந்து கொண்டால் இதை தடுப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடும் பெண்களும் சமூக அக்கறையில் செயல்படும் இளைஞர்களும் இதுபோன்ற சமூக அவலங்களை தட்டிகேட்க முன்வரவேண்டும் என்பது பொதுமக்களின் விரும்பம்.
இதுவரை கோயம்பேட்டில் விபச்சாரம் நடைபெறுவது தொடர்பாக பத்திற்கும் குறைவான வழக்குகளையே பதிவு செய்துள்ளனர். மேலும் கல்லூரியில் படிக்கும் மாணவிகளை சில கும்பல் மூளை சலவை செய்து இந்த தொழிலுக்கு பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விடுதியில் தங்கிப் படிக்கும் சில பெண்கள் பணத்திற்காக பார்ட் டைம்ஆக விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள்.
போலீஸார் லாரிகள் டூவீலர்கள் ஆட்டோக்களில் மட்டும் சோதனையை கனகச்சிதமாக செய்துவருகின்றனர்.
கோயம்பேடு விபச்சாரம் நடந்து வருவது காவல்துறைக்கு நன்கு தெரிந்தும் கல்லாகட்டுவதால், கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர்.
ஆசியாவிலே பெரிய பஸ்நிலையம் கோயம்பேடு என்ற பெயர் போய், சிகப்பு விளக்கு பகுதி என பெயரை விரைவில் எடுத்து விடும் என சமூக ஆர்வலர்களும் வியாபாரிகளும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.