4G டேடா சேவையில் மற்ற நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் புதிய அதிரடி ஆஃபரை அறிவித்துள்ளது. இது நேற்றுமுதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதன்படி, புதிய வாடிக்கையாளர்கள் ரூ.148க்கு முதல் ரீசார்ஜ் செய்யும் பொழுது 70GB 4G டேடா, ரூ.50 டாக் டைமுடன் 70 நாட்கள் வேலிடிட்டியில் கொடுக்கப்படுகிறது. வாய்ஸ் கால் வசதி இந்த பிளானில் வழங்கப்படவில்லை. வாய்ஸ் கால்களை ஒரு நிமிடத்துக்கு 25 பைசாவில் பெறலாம்.
இது தவிர, ரூ.54, மற்றும் ரூ. 61 ஆகிய ரீசார்ஜ் ஆப்சன்களும் உள்ளன. , ரூ.54க்கு ரீசார்ஜ் செய்பவர்களுக்கு 1GB 4G டேடா, 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. அதன் படி, ரிலையன்ஸ் மொபைல் கால்கள் ஒரு நிமிடத்துக்கு 10 பைசாவிலும், மற்ற மொபைல்களுக்கு 25 பைசாவிலலும் கால்களை பெறலாம்.
இந்த அறிவிப்பு மே-1ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. ஆரம்பகட்டமாக, தெலங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த சலுகை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.