சேலம் அருகே உள்ள கிச்சிப்பாளையத்தில் இரும்பு கடை வைத்துள்ளவர் வீட்டில் மரம் நபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரும்பு வியாபாரி அத்தியப்பன் மறைந்த நிலையில், அவரது மனைவி விஜியலட்சுமி குடும்பத்தினர் திருப்பதி சென்றுள்ளனர்.
இதனை சாதகமாக பயன்படுத்திய கொள்ளையர்கள் வீட்டின் ஜன்னலை உடைத்து வீட்டுக்குள் புகுந்த அவர்கள் பீரோவில் வைத்திருந்த 720 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
சேலம் மாநகரில் அடிக்கடி திருட்டு நடப்பது வாடிக்கையாகிவிட்டது. இதனால் சட்டத்தை ஏமாற்றி கருப்பு பணம், தங்கத்தை பதுக்கி வைத்துள்ள பொதுமக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.