பீகார் மாநிலம் பெகுசராய் என்ற இடத்தை சேர்ந்தவர் ஜுன்ஜுன்ஷா. இவர் தனது 2 மகள்களை அங்குள்ள தனியார் பள்ளியில் சேர்த்திருந்தார். அவர்களுக்கு இந்த மாதம் கட்ட வேண்டிய கல்வி கட்டணத்தை அவர் செலுத்தவில்லை. அவரிடம் பணம் இல்லாததால் செலுத்த முடியாத நிலையில் இருந்தார்.
இந்த நிலையில் மாலையில் இருவரையும் அழைத்து வருவதற்காக ஜுன்ஜுன்ஷா பள்ளிக்கு சென்றார். அப்போது மாணவிகளை வெளியே அனுப்ப மறுத்த பள்ளி நிர்வாகத்தினர் தந்தையை அழைத்து உடனடியாக கல்வி கட்டணத்தை செலுத்தும்படி கூறினார்கள்.
அதற்கு ஜுன்ஜுன்ஷா தன்னிடம் தற்போது பணம் இல்லை. சிறிது கால அவகாசம் கொடுங்கள் பணத்தை கட்டிவிடுகிறேன் என்று கூறினார்.
ஆனால் அதை ஏற்க மறுத்த நிர்வாகத்தினர் பள்ளி கட்டணத்தை செலுத்தாவிட்டால் எங்கள் பள்ளி சீருடையை உங்கள் மகள் அணியக்கூடாது என கூறி இரு மாணவிகளின் சீருடைகளையும் அகற்றினார்கள்.
இதனால் அவர்கள் கிட்டதட்ட அரை நிர்வாண நிலையில் இருந்தனர். இப்படியே இரு மகள்களையும் அழைத்து செல்லுங்கள் என்று அவருடன் அனுப்பி வைத்தனர். வேறு வழியில்லாமல் அந்த நிலையிலேயே மாணவிகளை வீட்டுக்கு அழைத்து வந்தார். இந்த காட்சிகளை செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
இந்த சம்பவம் பற்றி கல்வித்துறைக்கு தகவல் வந்தது. அவர்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டனர். மேலும் போலீஸ் நிலையத்தில் இது சம்மந்தமாக புகார் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பள்ளி தாளாளர், முதல்வர், பள்ளி ஆசிரியை ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது சம்மந்தமாக கல்வி மந்திரி அசோக்சவுத்ரி கூறும்போது, இந்த சம்பவத்துக்கு காரணமான பள்ளி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.