கோவை மாவட்டம் சூலூரில் அசாம் போடோலாந்து இயக்கத்தை சேர்ந்த 2 பேரை தேசிய புலனாய்வு போலீசார் கைது செய்துள்ளனர். சூலூர் அருகே சித்தநாயக்கன்பாளையத்தில் சாந்திபீட்ஸ் கறிக்கோழி குஞ்சு உற்பத்தி பண்ணையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை அந்த நிறுவனத்தில் டெல்லி தேசிய புலனாய்வு பிரிவினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து அங்கு பணியாற்றிய 2 பேரை கைது செய்த தேசிய புலனாய்வு பிரிவினர், அவர்களை ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்ற ரகசிய தகவலின்பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.