News
Loading...

சர்க்காரியா கமிஷன் – ஒரு முன்னோட்டம்…


சர்க்காரியா கமிஷன் – ஒரு முன்னோட்டம்…

நீதிபதி ரஞ்சித் சிங் சர்க்காரியா

பேர கேட்டாலே உபிஸ் ஈரகொலையே ஆடும்

கட்டுமரத்தின் உண்மை முகத்தை அன்றே வெளிபடுத்திய மகான்...

இந்திராகாந்தி 1976ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதி சர்க்காரியா தலைமையில் திமுக அரசின் ஊழல்களை விசாரிக்க ஒரு விசாரணை கமிஷனை அமைக்கிறார்.

அந்தக் கமிஷன் ஒரு நீண்ட விசாரணையை நடத்தி, தனது அறிக்கையை சமர்ப்பிக்கிறார்.அதில் கட்டுமரத்தின் விஞ்ஞான ரீதியான ஊழல்களை வெளிபடுத்தினார்.

தி. மு. க ஊழலை "விஞ்ஞான ஊழல்" என்றே, நீதிபதி சர்க்காரியா தனது அறிக்கையில் எழுதினார்.

அரசு அதிகாரிகளுக்குஒரு மன்னர் போல உத்தரவுகளை இட்டுள்ளார் கட்டுமரம்.

அரசு ஊழியர்களுக்கு வாய்வழி உத்தரவு மூலம் தவறான உத்தரவுகளை வழங்கி அதன்மூலம் இலாபடைந்தனர் கட்டுமரம் அமைச்சரவை சகாக்கள்.

2002ல் அரசு ஊழியர்க்கு D.A..announce பண்ணாம ஆட்டய போட்டவரு..
நிதிநிலையை காரணம் காட்டி... அதையே பின்னால் வந்தவர்கள் பின்பற்ற காரணமானவர்.

திமுகவோடு காங்கிரஸ் கூட்டணி சேர்ந்தது. இதையடுத்து, இந்திராகாந்தி, இந்த விசாரணை கமிஷனின் பரிந்துரையை குப்பையில் போட்டார் இந்திரா காந்தியின் காலில் திமுக விழுந்ததும், திமுகவோடு கூட்டணி அமைத்தவுடன், சர்க்காரியா விசாரணையை கல்லறைக்குள் புதைத்தார்.

சென்னை LIC அருகே, ஒரு பெரிய கட்டிடம் முதலில் க்ளோப் தியேட்டராக இருந்து நியூ க்ளோபாக மாறி அலங்கார் தியேட்டராக மாறி இப்போது ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ். அந்தக் கட்டிடம் குஷால்தாஸ் என்பரின் பரம்பரைச் சொத்தாகும். இந்த கட்டிடத்தை வரதராஜன் பிள்ளை என்பவர் 25 ஆண்டுகளாக குத்தகைக்கு எடுத்திருக்கிறார். குத்தகை கட்டணமாக குஷால்தாஸுக்கு ஆண்டுதோறும் 5000 ரூபாய் கொடுக்கிறார் வரதராஜன். ஆனால் தியேட்டர் நடத்துவதால் இவருக்கு வாரந்தோறும் வருமானம்8000 ரூபாய்.

குத்தகை காலம் முடிவடைந்ததும், குத்தகையை புதுப்பிக்க விருப்பமில்லை என்று தெரிவிக்கிறார்.
வாரம் 5000 லாபம் பார்க்கும் வரதராஜப் பிள்ளை விடுவாரா? எனக்கே விற்று விடுங்கள் என்று அடிமாட்டு விலைக்கு கேட்கிறார். இதனால் குஷால்தாஸ் வழக்கு தொடுக்கிறார். இந்த விசாரணை நீதிமன்றம் செல்கிறது. உச்சநீதிமன்றம், குஷால் தாஸூக்கு ஆதரவாக தீர்பபளிக்கிறது. இடத்தைக் காலி செய்து, உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிடுகிறது.

உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பளிப்பது நாம் சட்டத்தையே மாற்றுவோம் நடப்பது திமுக ஆட்சிதானே😂 என்று திமுக அரசின் அதிகார மையங்களை அணுக தீர்மானிக்கிறார். வரதராஜ பிள்ளை முதலில் முரசொலி மாறனை அணுகுகிறார். அவர் அமைச்சர் ப.உ.சண்முகத்தை சந்திக்குமாறு அறிவுறுத்துகிறார். ப.உ.சண்முகத்தை சந்தித்த போது, இது தொடர்பான சட்டத் திருத்தத்தை கொண்டு வருவதற்கு ஒரு லட்ச ரூபாய் ஆகும் என்று தெரிவிக்கிறார்.

முதல் தவணையாக 40 ஆயிரம் ரூபாய் ப.உ.சண்முகத்துக்கு கொடுக்கப் படுகிறது இதற்குப்பிறகு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்த வரதராஜ பிள்ளையிடம், 1 லட்சம் கேட்டால் வெறும் 40 ஆயிரம் தான் கொடுத்திருக்கிறீர்கள், சட்டம் திருத்தப் படுவதற்கு மேலும் 60 ஆயிரம் தேவைப்படும் என்று கருணாநிதி கூறியுள்ளார். ஆனால் வரதராஜ பிள்ளை தன்னிடம் 60 ஆயிரம் இல்லை என்றும், 30 ஆயிரம் தான் மேற்கொண்டு தர முடியும் என்று சொன்னதை ஏற்றுக் கொண்ட கருணாநிதி, பணம் பெற்ற பிறகு மந்தகதியில் செயல்படும் அரசு இயந்திரம் மின்னல் வேகத்தில் செயல்பட்டிருக்கிறது சட்டப்பேரவையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படுகிறது.

அவசர அவசரமாக சட்டம் கொண்டு வரப்பட்டு, தபாலில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பினால் தாமதமாகும் என்று ஒரு அதிகாரி விமானத்தில் டெல்லி சென்று, குடியரசுத் தலைவரின் ஒப்பந்ததை பெற்று வருகிறார். இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம், ஒரிஜினல் உரிமையாளரிடம் சேர வேண்டிய சொத்து ஆட்டையைப் போட்ட வரதராஜ பிள்ளைக்கு வந்து சேர்ந்தது.

இது அவசியமற்ற சட்டத் திருத்தம் என்று குறிப்பு எழுதிய அரசு அதிகாரி மிரட்டப் படுகிறார்.

சட்டத்திருத்த மசோதாவை கொண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி உணவு அமைச்சர் ப.உ.சண்முகம் அமைச்சர் மாதவன் வரதராஜபிள்ளைக்கு மறைமுகமாக உதவினர் என்பதை நீதிபதி சர்காரியா பதிவு செய்தார்.

அன்று ஒரு இலட்சத்தில் ஆரம்பித்த கட்டுமரத்தின் சாதனை பயணம் இன்று மகள் மூலமாக 1 இலட்சத்து 76 கோடியாக உயர்ந்துள்ளது.

#DMK #DMKFails

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.