News
Loading...

ஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி?

ஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி?

டி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். கோவில்களில் திருவிழாக்கள் களைகட்டும். ஆன்மீக மாதமான ஆடி மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

மேஷம்
நல்ல பணப்புழக்கமும், பொருளாதார ஏற்றமும் நிறைந்ததாக இருக்கும். எத்தகைய துன்பங்களாக இருந்தாலும் சந்தித்து முறியடிக்கும் வல்லமையைப் பெறலாம். வேலையில் உங்கள் தனித்தன்மை வெளிப்படும்.

குடும்ப முன்னேற்றம் ஏற்படும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.உறவினரால் நன்மை உண்டு. கணவன், மனைவியரிடையே பிரச்சனைகள் வந்து போகும்.

நண்பர்கள் இடத்தில் மனக்கிலேசம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் அருகில் இருப்பவரிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். ஒரு சிலர் எதிர்பாராத இட மாற்றத்தை சந்திக்க வேண்டி வரும்.வருமானம் நன்றாக இருக்கும்.

சொந்தத் தொழில் புரிவோர் சிறிது சிரமம் எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்புகளுக்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். ஒரு சிலர் தொழில் காரணமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம்.

சுபச் செலவு ஏற்படும். பெண்கள் குடும்ப ஒற்றுமைக்காக விட்டுக் கொடுத்து போக வேண்டி வரும். பொதுநல சேவை செய்பவர்களுக்கு பாராட்டு, புகழ் கிடைக்கும். உணவு, பழக்க வழக்கங்களை ஒழுங்கு படுத்துவதன் மூலம் நோய் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள்.

சனிக்கிழமை பெருமாள் கோவிலில் உள்ள கருடமூர்த்தியை வணங்கவும்.

ரிஷபம்
இதுவரை இருந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். எடுத்த காரியம் வெற்றியாகும். நல்ல பணப்புழக்கம் ஏற்படும். உறவினர்கள் சுமுகமாக இருப்பார்கள். கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைத்தால் பதவி உயர்வு வந்து சேரும். மேலதிகாரிகளின் அனுசரணையோடு இருப்பார்கள்.பணி இடமாற்றம் வரலாம். வங்கிக் கடன்கள் மூலம் சில பிரச்சனைகளை கட்டுக்குள் வைக்க முடியும்.

தொழிலதிபர்கள் தொழிலில் முன்னேற்றம் காணும் மாதம் இது. நண்பர்கள் உங்கள் உதவிகளைப் பெற்றுக் கொள்வார்கள். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சிலர் இடையூறு செய்தாலும் சமாளித்து விடுவீர்கள்.

பெண்களுக்கு குடும்பத்தில் உங்களுடைய கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதால் மனவேதனை ஏற்பட்டு மறையும். பணிக்குச் செல்லும் பெண்கள் சக உயர் அதிகாரிகளால் நிம்மதிப் பெருமூச்சடைவீர்கள். வேலைப்பளு குறையும்.

மாணவர்கள் கவனம் எடுத்து படிப்பதன மூலம் ஆசிரியர்களிடம் பாராட்டுப் பெற்று சக மாணவர்களுடன் போட்டியிடுவீர்கள். பெற்றோர்களின் ஆசி கிட்டும்.

வியாழக் கிழமை தோறும் சிவன் கோவிலை மூன்று முறை வலம் வருவது நலம் தரும்.

மிதுனம்
இந்த மாதம் பொருளாதார மேம்பாடும் இன்பமும் உண்டாகும். நாமக்கல் உண்டு. செல்வாக்கு அதிகரிக்கும். திருமணம் கை கூடும். இறையருள் கூடும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகும். திருமண சுபநிகழ்ச்சிகள் நடக்கும். கணவன், மனைவி இருவரும் அன்யோன்யமாவார்கள். குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேருவார்கள்.

உத்தியோக ஒப்பந்தங்கள் நிறைவேறும். பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவலாம் உங்கள் திறமையில் இருந்த பின்தங்கிய நிலை இனி மாறும். உடல் உபாதைகள் குறையும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும்.

தொழில் செய்வோருக்கு அதிக வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். எதிரி தொல்லை குறையும். குழப்பமான மனநிலையும் இருப்பதால் முன்யோசனையுடன் திட்டமிடல் அவசியம். பெண்கள் நிதானமாக நடந்து கொள்ள வேண்டிய காலம். பிள்ளைகளால் தொந்தரவுகள் நீங்கி நல்லவைகள் நடக்க ஆரம்பிக்கும். கருத்துப் பரிமாற்றங்கள் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை.

மாணவர்களுக்கு அனுகூலமான மாதமாக காணப்படுகிறது.வெற்றி காண்பீர்கள். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். நண்பர்களுடன் பழகும் போது எச்சரிக்கை தேவை.

புதன் கிழமை பெருமாளுக்கு நல்லெண்ணெய் ,நெய் இரண்டையும் கலந்து விளக்கு ஏற்றவும்.

கடகம்
இந்த மாதம் ஏராளமாக நன்மைகள் நடக்கக் கூடிய காலம். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பும் மரியாதையும் உருவாகும். தடைப்பட்டு வந்த திருமணம் , புதிய வீடு கட்டுவதற்கான வேலைகள் இப்பொழுது துவங்கலாம். தடைகள் வந்தாலும் முறியடிக்க எல்லா வகைகளிலும் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும் .விட்டுக் கொடுத்து போவதினால் ஆதாயம் கிடைக்கும். பெரியோர் ஒருவருடன் ஒத்துழைப்புடன் நல்வழியில் செல்வீர்கள். நீண்ட நாள் பிரச்சனை முடிவுக்கு வரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலைச்சலும், வேலைப்பளுவும் இருக்கும் . எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்கும். நீங்கள் சென்ற இடமெல்லாம் அனுகூலம் ஏற்படும். உங்கள் நம்பிக்கைக்கு உகந்தவரை தேர்ந்தெடுத்து அவருடன் மனம் விட்டு பேச முயலுவீர்கள்.

தொழில் புரிவோருக்கு மந்த நிலை மறையும். லாபம் அதிகரிக்கும். புதிய தொழில்களுக்கு அரசாங்க அனுகூலம் கிடைக்கும். பெண்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற கொஞ்சம் போராட வேண்டி வரலாம். தொழில் புரியும் பெண்கள் நல்லவருமானத்தை எதிர்பார்க்கலாம். சேமிப்புகள் சேரும். ஓய்வின்றி உழைத்தாலும் உங்களுக்கு குடும்பத்தில் கிடைக்க வேண்டிய ஆறுதல்கள் கிடைக்காத போது மனம் வேதனை அடையும்.

எல்லா இடங்களிலும் கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை அடையலாம். மந்த நிலை அடியோடு மாறும். மருத்துவச் செலவு குறையும். ஆசிரியர்களிடம் நற்பெயரை பெறுவீர்கள்.

திங்கள் கிழமை விரதமிருந்து அம்பாளையும், சிவனையும் வணங்குங்கள்.

சிம்மம்
பிரச்சனைகளை முறியடிக்கும் வலிமை உண்டாகும். மனதில் ஆனந்தம் ஏற்படும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான உன்னதமான கால கட்டம். திருமண சுபநிகழ்ச்சிகள் தடையின்றி நடை பெறும். குடும்பத்தில் மனைவி கணவனோடு சில கருத்து வேறுபாடுகள் வந்தாலும் நொடிப் பொழுதில் சரியாகி விடும். உறவினர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு வரலாம். பிள்ளைகளால் பெருமை ஏற்படும்.

உத்தியோகஸ்தர்கள் நெருப்புசம்பந்தமான வேலைகளில் இருப்பவர்கள் கவனமோடு பணி செய்ய வேண்டும். கோரிக்கைகள் நிறை வேறும். சக ஊழியர்கள் அனுசரனையாக இருப்பார்கள். கொடுக்கப்பட்ட பொறுப்புகளை திறமையாக செய்வீர்கள். அதிக வேலைப்பளு இருந்தாலும் நற்பெயர் எடுப்பீர்கள்

தொழிலதிபர்கள் தொழில் மேன்மை நிலையை அடையும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு பொன்னான காலகட்டமிது. லாபத்தை அள்ளுவீர்கள். கூட்டு வியாபார சுணக்க நிலை மாறும். வரவு நன்றாக இருக்கும். பெண்கள் வழக்குகளில் வெற்றிகொடி நாட்டுவார்கள். கருத்து வேறுபாடு மறைந்து உறவுகள் நல்ல முறையில் இருக்கும். உடல் நலம்நன்றாக இருக்கும்.

மாணவர்கள் சிறிது சிரமப்பட்டால் வெற்றி பெறலாம். நினைத்த மதிப்பெண்கள் கிடைக்கும். நண்பர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைத்து பாராட்டைப் பெறுவீர்கள். ஆசிரியர்களுடன் கருத்து வேற்றுமை மறையும். அனைத்து வாய்ப்பையும் பயன்படுத்தி எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக்குவீர்கள்

ஞாயிற்றுக்கிழமை அன்று கால பைரவரை வணங்குங்கள்.

கன்னி
நல்ல பொருளாதார வளம் மற்றும் மேன்மையும் உண்டாகும். எடுத்த காரியம் வெற்றிகரமாக முடியும். நீண்ட நாட்களாக காத்திருந்தவர்களுக்கு இனிப்பான செய்தி ஒன்று காத்திருக்கிறது.எதையும் முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு வந்து சேரும். மனதில் இருந்து வந்த இனம்புரியாத வேதனை அகலும்.பிரிந்த குடும்பம் சேரும். மனைவி இடம் இருந்த கருத்து வேறுபாடு அடியோடு ஒழியும். திருமண சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். சந்தான பாக்கியம் கிட்டும்.

உத்தியோகம் பார்ப்பவர்கள் மேன்மை நிலையை அடையலாம். பிள்ளைகளால் பெருமை உண்டு. பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவைகிடைக்கும். வாகனம் வாங்கும் யோகம் உண்டு. ஆடம்பர பொருட்களை வாங்கும் போது கவனம்வேண்டும்.

தொழிலதிபர்கள் வெளியூர் செல்ல நேரிடலாம். ஒரு சிலர் தூர தேச பயணம் மேற்கொள்ள வேண்டி வரும். செய்து வரும் தொழில் சிறப்பான பலன்களை தரும். கூடுதல் லாபத்தால் தொழிலை விரிவுபடுத்தும் வேலைகளை ஆரம்பிக்கலாம்.பெண்களுக்கு தேவையான பொருட்கள் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் கசப்பூட்டும் சம்பவங்கள் ஏற்படும். உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். வேலை பார்க்கும் பெண்களுக்கு இது நல்ல காலம். பதவி உயர்வும் பொருளாதார உயர்வும் ஏற்படும்.

மாணவர்கள் நல்ல நிலைக்கு செல்வீர்கள். விரும்பிய பாடம் கிடைக்கும். மனதில் இருந்து வந்த பயம் போக பெரியோர்களிடம் ஆலோசனையும், பயிற்சிகளையும் கேட்டுக் கொள்ளுங்கள். இது எதிர்காலத்திற்கு சிறந்த பயனைத் தரும்.

வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு வெள்ளைநிற பூக்களைக் கொண்டு அர்ச்சனை செய்யவும்.

துலாம்
இந்த மாதம் பல்வேறு துன்பங்களுக்கு இடையில் நன்மைகளை அனுபவிக்கப் போகிறீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியில் உள்ள பிரச்சினை முடியும். செல்வம், உரிமை, அதிகாரம் ஆகியவை கிடைக்கப் பெறுவீர்கள். தவறான வழிமுறைகளில் செல்வம் கரையலாம் எச்சரிக்கையாக இருக்கவும். எல்லாவற்றிலும் கவனம் தேவை.சுபநிகழ்ச்சிகள் தள்ளிப் போகலாம். தம்பதிகளிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும் இதுவரை இருந்து வந்த குறைகள் ஒவ்வொன்றாக மாறும். பொருளாதாரம் சிறப்படையும். பிள்ளைகளிடம் அன்பு, பாசம் காட்டவேண்டியது அவசியம்.

உத்தியோகம் பார்ப்பவர்கள் தொடர்ந்து சற்று சிரத்தை எடுக்க வேண்டியதிருக்கும். நெருப்பு வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும். உங்கள் கௌரவம் உயரும். மேலதிகாரிகளின் உதவியால் குறித்த நேரத்தில் வேலையை செய்து முடிப்பீர்கள். தொழிலதிபர்கள் வியாபாரிகள் முன்னேற்றப் பாதையில் செல்வார்கள். பெண்களுக்கு சிறப்பான பலன்கள் சேரும். சொத்து பிரச்சனைகளில் சாதகமான தீர்ப்பு வரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

மாணவர்கள் தீவிர முயற்சி எடுத்து படிப்பது அவசியமாகும். வயிறு உபாதைகள் வந்து வந்து மறையும். ஆசிரியர்கள் உங்களை சிறந்த மாணவர்களுடன் ஒப்பிட்டுப் பேசுவதால் பாராட்டு மழையில் நனைவீர்கள்.

வெள்ளிக்கிழமை அன்று சிவன் கோவிலில் உள்ள நவக்ரஹ சன்னதியை ஒன்பது முறை வலம் சென்று வழிபடவும்.

விருச்சிகம்
வாழ்க்கை வளம் முன்னேறும். தெய்வ அனுகூலத்துடனும் காரியங்களை சாதிப்பீர்கள். உணவுக்கட்டுப்பாடு அவசியம். கைவிட்டுப்போன பொருட்கள் உங்களை வந்தடையும். வழக்குகளில் இருந்து வந்த சங்கடங்கள் விலகும். குடும்பத்தில் சின்னச் சின்ன குழப்பங்கள் மறைந்து நன்மைகள் கிடைக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வர். யோசனையுடன் திட்டமிடல் குடும்பத்தில் சிக்கலை தீர்க்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய பதவி வரும். எதிரிகள் இருக்கும் இடம் தெரியாமல் போவார்கள். முன்னேற்றம் உண்டாகும். உங்களுடைய வேண்டுகோள்களை மேலதிகாரிகள் ஏற்று நடப்பார்கள். விரும்பிய பணி இடமாற்றம் கிடைக்கும். சேமிப்புகளுக்குண்டான ஏற்பாடுகளை செய்வீர்கள்.

தொழிலதிபர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். அறிவை மூலதனமாக்கி தொடங்கும் தொழில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வியாபார யுக்திகளை நீங்கள் பயன்படுத்த வேண்டி வரும்.பெண்களுக்குள் ஒற்றுமை பலப்படும். பொருளாதார வலிமை அதிகரிக்கும். அதே வேளையில் பொருள் இழப்புகளும் ஏற்படலாம். நண்பர்களிடம் எச்சரிக்கை தேவை. பெண்களுக்கு சந்தோஷமான வாழ்க்கை நல்ல படியாக அமையும்.

மாணவர்கள் கல்வியில் உற்சாகமும் நம்பிக்கையும் உண்டாகும் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். விரும்பிய பாடம் கிடைக்கும், நண்பர்களிடத்தில் சில பழிச்சொல்லுக்கு ஆளாகலாம் கவனம் தேவை.

செவ்வாய்கிழமை அன்று அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றவும். அரளி மாலை சாற்றி வழிபடவும்.

தனுசு
திறமைகள் வெளிப்படும். தடைகள் வந்தாலும், இறைவனின் அருளால் வெற்றிப் பாதையில் பயணிப்பீர்கள். வருங்காலத்திற்குத் தேவையான முதலீடுகளை செய்வீர்கள். குடும்பத்தில் சின்னச்சின்ன வாக்குவாதங்கள் வரலாம். விட்டுக் கொடுத்துப் போவதால் நிலைமை சரியாகும். ஒருவருடன் மனஸ்தாபம் உண்டாகும் விரும்பத்தாகாத செய்தி ஒன்று வரலாம். கணவன், மனைவியரிடையே அன்பு அதிகரிக்கும்

பணி புரிபவர் உடன் பணிபுரிவர் ஆதரவால் பிரச்சனைகளைச் சமாளிப்பீர்கள். சிறு வாக்கு வாதங்கள் வரலாம். காரிய அனுகூலம் கிட்டும். பணம் சம்பந்தப்பட்ட விடயங்களில் சொன்ன வாக்கைக் காப்பாற்ற சிறிது போராட வேண்டி வரலாம்.

தொழிலில் தேவையில்லாத பண விரயம் ஏற்படம். கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற முயல்வீர்கள். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் வேண்டும் பெண்கள் எதிர்பார்ப்புகள் வைத்து கொள்ள வேண்டாம். எந்த வேலையிலும் கவனச் சிதறல் இல்லாமல் இருங்கள். வெற்றி வரும். நீங்கள் நம்பிப் பழகும் ஒருவரால் நீங்கள் ஏமாற்றப் பட நேரிடலாம் ஆகவே கவனமாக இருங்கள்.

மாணவர்களுக்கு நிதானமும் கவனமும் தேவை. சுற்றுலா சமயங்களில் அனைவருடன் ஒற்றுமையாக பழகி பக்குவமாக நடந்து கொள்ளுதல் அவசியம். கேட்ட உதவிகள் கிடைக்கும்.

வியாழக்கிழமை அன்று குரு கோவிலுக்குச் சென்று வணங்கி வாருங்கள்.

மகரம்
நன்மைகள் தரக்கூடிய காலம். உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தால் பொருளாதார வகையிலும் வாழ்க்கைத் தரத்திலும் வளர்ச்சி உண்டாகும். அனைவரும் உங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள். எதிலும் முதலீடு செய்வதற்கு முன் குடும்பத்தாருடன் ஆலோசனை செய்து கொள்ளவும். இருப்பதைக் கொண்டு வாழ்ந்திட முயற்சி செய்யுங்கள். தொலைந்த பொருட்கள் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் தடையின்றி கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சில கசப்பூட்டும் சம்பவங்கள் ஏற்படும்.

உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு இது நல்ல காலமாகும். உயர் அதிகாரிகள் அனுசரணை கிடைக்கும். சம்பள உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். உங்கள் பொறுப்புகளை வேறு நபரிடம் ஒப்படைக்க கூடாது.

உழைப்புக்கு ஏற்ற பிரதிபலன் இல்லாமல் இருந்தவர்கள் தற்போதைய காலம் நன்மைகள் நடக்க காண்பார்கள். வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும். தொழில் காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிய நேரிடலாம். நல்ல லாபம் கிடைக்கும்.பெண்கள் காரியத்தாமதம் ஏற்படலாம். வேலை பார்க்கும் பெண்கள் வேலையில் கவனச் சிதறல் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். உங்கள் கௌரவம் நிலைக்கும் . வழக்கு சாதகமாக இருக்கும். விட்டுக் கொடுத்து போவது நல்லது.

மாணவர்கள் நல்ல பலனைக் காணலாம். நிறைய மதிப்பெண்கள் கிடைக்கும். விரும்பிய பாடம் கிடைக்கும். காணாமல் போன பொருள் ஒன்று தட்டுப்படும். நண்பர்களுடன் பழகும் போது எச்சரிக்கை தேவை.

சனிக்கிழமை அன்று பெருமாள் ஆலயத்திற்குச் சென்று நீராஞ்சன தேங்காய் தீபம் ஏற்றவும்.

கும்பம்
போதிய அளவில் பணம் கிடைக்கும். தீவிர முயற்சிகளால் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். தெய்வ அனுகூலம் கிட்டுவதால் சிக்கலில் இருந்து முன்னேற்றம் ஏற்படும். தூரத்திலிருந்து வரும் செய்திகள் அனுகூலம் இல்லாமல் இருக்கலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது. கணவன், மனைவியிடையே அன்பு அதிகமாகும். சின்னச் சின்ன வாக்கு வாதங்கள் வரலாம்.ஒருவருடன் மனஸ்தாபம் உருவாகலாம். எதிர்பார்ப்புகள் எதுவும் வேண்டாம்.

உத்தியோகஸ்தர்கள் உடன்பணிபுரிபவரால் நன்மை உண்டு. உங்கள் பொறுப்புகளை வேறு நபரிடம் தர வேண்டாம். சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். வேலைப் பளு அதிகமாகும். வெளியூர் பயணத்தின் மூலம் நற்பெயர் ஏற்படும்.

தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி ஏற்படும். புதிய முதலீடு செய்வதற்கு முன் ஆலோசனை செய்து கொள்ளவும். இல்லையெனில் தொந்தரவுகள் வரலாம். இருப்பதைக் கொண்டு வாழ்ந்திட முயற்சியுங்கள். தீவிர முயற்சிக்கு பலனை எதிர்ப்பார்க்கலாம். பெண்களுக்கு நாவடக்கம் மிகத் தேவை. உடல் நலத்தில் கண்காணிப்பும் அவசியம். பிள்ளைகளால் நற்செய்தி உண்டு. யாரிடனும் கலந்துரையாடுவதைத் தவிர்க்கவும். பணிக்கு செல்லும் பெண்களுக்கு பிரச்சனைகள் வந்து மறையும்

மாணவர்கள் அதிக கவனம் எடுத்துப் படிப்பது நல்லது. நண்பர்களுக்கு உதவி புரிவீர்கள். ஆகவே அவர்கள் வட்டாரத்தில் நற்பெயரும் உண்டு. பாராட்டுகள் உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்

சனிக்கிழமை அன்று சனிஹோரையில் சிவன் கோவிளுக்கு சென்று வாருங்கள். (காலை 6மணி முதல் 7 மணி வரை)

மீனம்
எந்தத் துறையிலும் முத்திரையைப் பதிப்பீர்கள். தெய்வ அனுகூலத்தால் கஷ்டங்களில் இருந்து விடுபட்டு முன்னேறுவீர்கள். உழைப்பின் மூலம்தான் வெற்றிகள் கிடைக்கும். வழக்குகள் சாதகமாக இருக்கும். சிலருக்கு கடன்கள் வரலாம். சொத்து பிரச்னைகள் உங்களுக்கு சாதகமாக முடியும். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் அனைத்தும் அடியோடு மறையும். சுப நிகழ்ச்சிகள் நிகழும். கணவன், மனைவியிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

உத்தியோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். பதவி உயர்வு சம்பள உயர்வு தடையின்றி கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்கள் வேலை கிடைக்கப் பெறலாம். புதிய வேலைகள் கிடைக்கலாம். வேலை சம்பந்தமாக வெளியூர் செல்ல நேரலாம்.

தொழிலதிபர்கள் வியாபாரிகளுக்கு தொழிலில் நல்ல லாபம் இருக்கும். கவனச்சிதறலும் இருக்கும். கடந்த காலத்தை விட கூடுதல் வருமானம் பெறலாம். புதிய வியாபாரம் ஆரம்பிக்க போகும் முன் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் ஆலோசனை செய்யவும். உள்ளதை கொண்டு சிறப்பாக நடத்துவதற்கு முயற்சி செய்யவும்.பெண்கள் பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். உற்சாகமாக காணப்படுவர். கணவர், மற்றும் அண்டை அயலாரின் அன்பு கிடைக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்க இருப்பதால் கடினமான வேலைகளிலும் கூட உற்சாகமாக காணப்படுவீர்கள். அன்பாக பழகி அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள்.

மாணவர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும். நண்பர்கள் மிகவும் உதவியாக இருப்பர். தந்தை, தாயிடம் அன்பும், பாசமும் கிடைக்கப் பெறுவீர்கள். நல்லதே நடக்கும்.

அருகிலிருக்கும் கோவிலுக்குச் சென்று முடிந்தால் எண்ணெய் வாங்கிக் கோவிலுக்கு கொடுக்கவும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.